Last Updated:
மதுரையில் நடைபெறும் முதலாவது போட்டியில், தென் ஆப்ரிக்க அணியை ஜெர்மனி அணி எதிர்கொள்கிறது.
மதுரை, சென்னையில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரை ரசிகர்கள் கட்டணமின்றி பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
24 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் வருகிற 28 ஆம் தேதி முதல், அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
இதற்காக மதுரையில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஹாக்கி மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இந்த நிலையில் மக்களிடையே ஹாக்கி விளையாட்டு குறித்த ஆர்வத்தை அதிகப்படுத்தும் வகையில் ஜூனியர் உலகக் கோப்பை தொடரை இலவசமாக கண்டு ரசிக்கலாம் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.
www.ticketgenie.in இணையதளம் அல்லது Hockey India mobile app மூலம் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நடைபெறும் முதலாவது போட்டியில், தென் ஆப்ரிக்க அணியை ஜெர்மனி அணி எதிர்கொள்கிறது.
November 23, 2025 10:30 PM IST


