C J Pramoters & Dhedjassam Event Solutions அமைப்பு வடமாகாணத்தில் ஜுனியர் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியொன்றை நடத்தவுள்ளது. இந்தப் போட்டி முதலில் மாவட்ட ரீதியில் நடத்தப்படும். வடமாகாணத்தில் உள்ள சகல மாவட்டங்களிலும் இந்தப் போட்டி முதலில் நடத்தப்பட்டு இறுதிப் போட்டி 2024 செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி நடத்தப்படும். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கலாசார நிலையத்தில் நடத்தப்படும். இந்த இறுதிப் போட்டியில், புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. டி. கே. பட்டம்மாளின் பேத்தியான நித்யஸ்ரீ மகாதேவன், தமிழ் திரைப்பட பாடகரும் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றவருமான திவாகர், சுப்பர் சிங்கர் புகழ் தென்னிந்திய பின்னணிப் பாடகர் சத்தியபிரகாஷ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்தப் போட்டியின் முதலாவது குரல் தேர்வு யாழ்ப்பாணம், பிரதான வீதியிலுள்ள திருமறைக்கலாமன்றத்தில் எதிர்வரும் 2024 ஜுலை 06ஆம், 07ஆம் திகதிகளில் நடைபெறும்.
இந்தப் போட்டியின் இரண்டாவது குரல் தேர்வு யாழ்ப்பாணம், மருதனார்மடத்தில் உள்ள வடஇலங்கை சங்கீத சபை மண்டபத்திலும் சாவகச்சேரி நகராட்சி மண்டபத்திலும் எதிர்வரும் 2024 ஜுலை 13ஆம், 14ஆம் திகதிகளில் நடைபெறும்.
இந்தப் போட்டியின் மூன்றாவது குரல் தேர்வு மன்னார், நகர சபை மண்டபத்தில் எதிர்வரும் 2024 ஜுலை 20ஆம், 21ஆம் திகதிகளில் நடைபெறும்.
இந்தப் போட்டியின் அடுத்த குரல் தேர்வு பருத்தித்துறை, வல்லை, யாழ் பீச் ஹோட்டலில் எதிர்வரும் 2024 ஜுலை 27ஆம், 28ஆம் திகதிகளில் நடைபெறும்.
இந்தப் போட்டியின் குரல் தேர்வொன்று கிளிநொச்சி, பரந்தன் ஆர்ஜே மஹாலில் எதிர்வரும் 2024 ஓகஸ்ட் 03 ஆம், 04ஆம் திகதிகளில் நடைபெறும்.
இந்தப் போட்டியின் குரல் தேர்வொன்று முல்லைத்தீவு, நகர சபை மண்டபத்தில் எதிர்வரும் 2024 ஓகஸ்ட் 10 ஆம், 11ஆம் திகதிகளில் நடைபெறும். இந்தப் போட்டியின் குரல் தேர்வொன்று வவுனியா, நகர சபை மண்டபத்தில் எதிர்வரும் 2024 ஓகஸ்ட் 17 ஆம், 18ஆம் திகதிகளில் நடைபெறும். பிரிட்டிஷ் கவுன்சில், சங்கவி பிலிம்ஸ் நிறுவனம், ஆர்ஜே மஹால், யாழ் பீச் ஹோட்டல் மற்றும் ரெஸ்ட்டூரண்ட்டின் அனுசரணையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகள் அச்சு ஊடக அனுசரணை வழங்குவதுடன் “சமூகம்”, சமூக ஊடக வலைத்தளம் அனுசரணை வழங்கவுள்ளது.
The post ஜுனியர் சுப்பர் சிங்கர் குரல் தேர்வு எதிர்வரும் 6ஆம் திகதி யாழ் திருமறைக் கலாமன்றத்தில் appeared first on Thinakaran.

