Last Updated:
பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்று, பல உலக தலைவர்களை சந்தித்து பேசினார்.
கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர், உலக நாடுகளின் தலைவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். மாநாட்டின் இடையே, தென்கொரிய அதிபர் லீ ஜாவே-மியூங்கை சந்தித்துப் பேசினார். மேலும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனை சந்தித்துப் பேசினார். அப்போது, இருவரும் கட்டித்தழுவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
மேலும், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஜெர்மன் பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ், தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோஸா, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ் ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.
சர்வதேச சவால்களை எதிர்கொள்வது குறித்தும், சிறப்பான உலகை உருவாக்குவது குறித்தும் ஜி7 தலைவர்களுடன் பயனுள்ள கருத்து பரிமாற்றத்தை மேற்கொண்டதாக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார். இந்நிலையில், கனடா பயணத்தை முடித்துக் கொண்டு, குரோஷியாவுக்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார்.
June 18, 2025 10:41 AM IST


