Last Updated:
கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, அங்கு உலகின் முன்னேறிய பொருளாதார நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.
சைப்ரஸ் பயணத்தை முடித்துக் கொண்டு, ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கனடா சென்றார்.
சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது பெற்றது பற்றி பெருமிதம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த விருது தனக்கானது மட்டுமல்ல என்றும், 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை சேர்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இந்த விருதை இந்தியா – சைப்ரஸ் நாட்டு நல்லுறவுக்கு அர்ப்பணிப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பின்னர் நடந்த இந்தியா-சைப்ரஸ் நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்தில் இருநாட்டு தலைவர்கள் பங்கேற்று நட்புறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.
இதையடுத்து, ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி கனடா சென்றார். கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, அங்கு உலகின் முன்னேறிய பொருளாதார நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். இந்த மாநாட்டில் எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் புதுமை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
June 17, 2025 6:49 AM IST


