• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜியோ vs ஏர்டெல் திட்டங்கள்.. சிறந்த ஆஃபர்களை வழங்குவது எது?

GenevaTimes by GenevaTimes
March 27, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஜியோ vs ஏர்டெல் திட்டங்கள்.. சிறந்த ஆஃபர்களை வழங்குவது எது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் ஆகிய சேனல்களில் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. மொபைல் பயனர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரில் கிரிக்கெட் போட்டிகளை காணலாம். ஆனால் இது கட்டண சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். நீங்கள் ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை நேரடியாக வாங்கலாம் அல்லது உங்களிடம் ஜியோ அல்லது ஏர்டெல் மொபைல் சிம் இருந்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களின் மூலம் OTT சந்தாவை இலவசமாக பெறலாம்.

ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா ஐபிஎல் போட்டிகளை ஸ்ட்ரீம் செய்வதோடு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் வழங்குகிறது. மொபைல் ரீசார்ஜ் மூலம் இந்த சந்தாவைப் பெற விரும்பினால், ஜியோ மற்றும் ஏர்டெல்லின் பல ப்ரீபெய்ட் மொபைல் திட்டங்கள் இலவச அணுகலுடன் கிடைக்கின்றன.

ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்:

ஜியோ ரூ.100 டேட்டா திட்டம்: இந்த ரீசார்ஜ் திட்டமானது 90 நாட்களுக்கு அடிப்படை ஜியோ ஹாட்ஸ்டார் திட்டத்தையும் 5 ஜிபி கூடுதல் டேட்டாவையும் வழங்கும்.

ஜியோ ரூ.195 கிரிக்கெட் டேட்டா பேக்: 90 நாட்களுக்கு 15 ஜிபி டேட்டாவுடன் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்கும்.

ஜியோ ரூ.899 திட்டம்: 90 நாட்களுக்கு 2 ஜிபி தினசரி டேட்டாவுடன் 20 ஜிபி கூடுதல் டேட்டா, இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல்/டிவி சந்தா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை வழங்கும்.

ஜியோ ரூ.949 திட்டம்: 84 நாட்களுக்கு 2 ஜிபி தினசரி டேட்டாவுடன் இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட் சேமிப்பை வழங்கும்.

ஜியோ ரூ.3599 வருட திட்டம்: 365 நாட்களுக்கு 2.5 ஜிபி தினசரி டேட்டா, 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல்/டிவி சந்தா, ஜியோடிவி அணுகல் மற்றும் 50 ஜிபி ஜியோகிளவுட் சேமிப்பு வழங்கும்.

ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்:

ஏர்டெல் ரூ.195 திட்டம்: 90 நாட்களுக்கு 15 ஜிபி டேட்டாவுடன் 3 மாத இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும்.

ஏர்டெல் ரூ.301 திட்டம்: 28 நாட்களுக்கு 1 ஜிபி தினசரி டேட்டாவுடன் 3 மாத இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கும்.

ஏர்டெல் ரூ.549 திட்டம்: 28 நாட்களுக்கு 3 ஜிபி தினசரி டேட்டாவுடன் 3 மாத ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் ஸ்பேம் அழைப்பு பாதுகாப்பு வழங்கும்.

ஏர்டெல் ரூ.1,029 திட்டம்: 84 நாட்களுக்கு 2 ஜிபி தினசரி டேட்டாவுடன் 3 மாத ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, வரம்பற்ற அழைப்புகள் வழங்கும்.

ஏர்டெல் ரூ.3,999 வருட திட்டம்: 365 நாட்களுக்கு 2.5 ஜிபி தினசரி டேட்டாவுடன் 1 ஆண்டு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, வரம்பற்ற அழைப்புகள் வழங்கும்.

– தற்போதைய ரீசார்ஜுக்கு டேட்டா ஆட்-ஆன் திட்டம் தேடுபவர்களுக்கு ஜியோவின் ரூ.100/195 அல்லது ஏர்டெல்லின் ரூ.195/301 திட்டங்கள் அடிப்படை ஹாட்ஸ்டார் அணுகலை வழங்குகின்றன.

– முழுமையான ப்ரீபெய்ட் திட்டம் தேடுபவர்களுக்கு ஜியோவின் ரூ.899-949 அல்லது ஏர்டெல்லின் ரூ.549 திட்டங்கள் நல்ல சலுகையை வழங்குகின்றன.

– நீண்ட செல்லுபடியாகும் திட்டங்கள் தேடுபவர்களுக்கு ஜியோவின் ரூ.3,599 அல்லது ஏர்டெல்லின் ரூ.3,999 ஆண்டு திட்டங்கள் தடையற்ற ஸ்ட்ரீமிங் மற்றும் டேட்டா சலுகைகளை வழங்குகின்றன.

First Published :

March 27, 2025 1:44 PM IST

Read More

Previous Post

ஐபிஎல் 2025: 'சேப்பாக்கம் சிஎஸ்கேவின் கோட்டை.. ஆர்சிபிக்கு புதிய சவால் காத்திருக்கிறது' – பகீர் கிளப்பும் ஷேன் வாட்சன்!

Next Post

இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் காசாவில் இதுவரை 17,400 குழந்தைகள் கொலை.. அதிர்ச்சி தகவல்

Next Post
இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் காசாவில் இதுவரை 17,400 குழந்தைகள் கொலை.. அதிர்ச்சி தகவல்

இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் காசாவில் இதுவரை 17,400 குழந்தைகள் கொலை.. அதிர்ச்சி தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin