டெலிகாம் துறையை பொறுத்தவரையில் ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் ஐடியா மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் ஆகியவற்றுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. சமீபத்திய விலை உயர்வுக்குப் பிறகு, புதுப்புது ரீசார்ஜ் பிளான்கள், புதிய தொழில்நுட்பம் என தொலைதொடர்பு நிறுவனங்கள் மக்களை கவர போட்டிப் போடுகின்றன.
அந்த வகையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், எந்தவித டேட்டாவும் இல்லாமல், வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்-ஐ மட்டுமே உள்ளடக்கிய ரூ.189 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை இந்தியாவில் அறிமுகப்படுத்திய நிலையில், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், ஜியோ இப்போது ரூ.189க்கு இலவச வாய்ஸ் கால் மற்றும் பிற டேட்டா சலுகைகளுடன் ஒரு மலிவு விலை திட்டத்தை மீண்டும் வழங்குகிறது.
சில இணையதளங்களில் தெரிவித்துள்ள தகவலின்படி, ஜியோ இதற்கு முன்பே ரூ.189 பேக்கேஜை வழங்கி வந்ததாகவும், காரணமின்றி அந்த பிளானை நீக்கி விட்டு தற்போது அதை மீண்டும் திரும்பக் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரூ.189 ப்ரீபெய்ட் பேக்கேஜ், 28 நாள் வேலிடிட்டி உடன், 300 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இது, 2ஜிபி வரை கணக்கிட முடியாத வேகத்தில் டேட்டாவை வழங்குவதாகவும், அதைத் தொடர்ந்து 64Kbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்தத் திட்டத்துடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் மெம்பர்ஷிப்கள் இலவசமாக வழங்கப்படுகிறன. இருப்பினும், ஜியோ சினிமா பிரீமியம் இந்த பிளானுடன் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: துபாயில் வருமான வரி கிடையாது; ஆனால் செல்வ செழிப்பான நகரமாக திகழ்கிறது…! எப்படி தெரியுமா…?
ரூ.199 பிளானுக்குப் பிறகு, தற்போது மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் மற்றொரு பிளான் ரூ.189 திட்டமாகும். அதே நேரத்தில் ரூ.199 பிளான், 18 நாள் வேலிடிட்டி, நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரம் தொலைதொடர்பு நிறுவனம், நீண்ட வேலிடிட்டியுடன் கூடிய மேலும் சில ரீசார்ஜ் பிளான்களை விரைவில் அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது.
இதையும் படிக்க: உங்க ஜிமெயில் பாஸ்வேர்ட் மறந்துபோச்சா…? எளிதில் மீட்டெடுக்க உதவும் 5 ஸ்டெப்ஸ் இதோ…!
குறிப்பாக, ஜியோ முன்னதாக ரூ.1,958 விலையில் 365 நாட்கள் மற்றும் ரூ.458 விலையில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய இரண்டு புதிய வாய்ஸ் ஒன்லி ப்ரீபெய்ட் பிளான்களை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் நிறுவனம் இந்த பிளான்களின் விலைகளை மாற்றியமைத்து அவற்றை முறையே ரூ.1,748 மற்றும் ரூ.448ஆகக் குறைத்தது. அதே நேரத்தில் அதிக விலை கொண்ட பிளானுக்கான வேலிடிட்டி காலம் மட்டும் 336 நாட்களாக குறைக்கப்பட்டது. இது தவிர மற்ற சலுகைகள் அனைத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
February 04, 2025 3:23 PM IST
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்… மலிவு விலையில் மற்றொரு ரீசார்ஜ் பிளான் அறிமுகம்..!