[ad_1]
இதன் ஒரு பகுதியாக, நிறுவனம் அதன் சில பிளான்களின் கீழ் பல்வேறு கொண்டாட்டச் சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் கீழ் தங்கம், பரிசு மற்றும் பல இலவச சேவைகளை அதன் டெலிகாம், இ-ரீடெயில் பொழுதுபோக்கு உள்ளிட்ட பிராண்டுகளின்கீழ் வழங்கவுள்ளது.
ஆண்டு விழா கொண்டாட்டங்களின் கீழ் ஜியோ வழங்கும் சிறப்பு சலுகைகள் என்ன?
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 9 ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ரூ.349, ரூ.899 மற்றும் ரூ.999 பிளான்களின் கீழ் பல சலுகைகளை வழங்குகிறது.
இந்த சிறப்புத் திட்ட சலுகைகளால் ஜியோ வாடிக்கையாளர்கள் எப்படி பயனடைவார்கள்?
ரிலையன்ஸ் ஜியோ தனது 9ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வழங்கும் சிறப்பு சலுகைகளில், ஜியோ ஃபைனான்ஸ் மூலம் ஜியோ கோல்டை வாங்கும் ஒரு நுகர்வோருக்கு, நிறுவனம் கூடுதலாக 2% சலுகையை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொபைல் மற்றும் டிவி இரண்டிலும் பயன்படுத்தும் வகையில் ரூ.299 மதிப்புள்ள ஜியோ ஹாட்ஸ்டாருக்கான 90 நாட்கள் சப்ஸ்கிரிப்ஷனை நிறுவனம் வழங்குகிறது.
அதேபோல ரிலையன்ஸ் டிஜிட்டலில் இருந்து குறிப்பிட்ட சில பொருட்களை வாங்கும் நுகர்வோருக்கு ரூ.399 தள்ளுபடி சலுகைகள் கிடைக்கும். இந்த சலுகை Ajio-விற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது, இதன்படி இந்த ரிலையன்ஸ் இ-ரீடெயில் பிராண்டில் ரூ.1,000 மதிப்பிற்கு ஷாப்பிங் செய்தால் ரூ.200 வரை தள்ளுபடி கிடைக்கும். இதுமட்டுமின்றி, நுகர்வோர் மூன்று மாத Zomato Gold மற்றும் 1 மாத JioSaavn Pro சப்ஸ்கிரிப்ஷன்களையும் பெறுவார்கள்.
ஜியோவின் மொபைல் பிளான்களில் சிறப்பு சலுகைகளை எவ்வாறு பெறுவது?
ரூ.349 திட்டத்தின் கீழ் யூஸர்கள் 28 நாட்களுக்கு 2GB தினசரி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்ஸ் மற்றும் 100 தினசரி இலவச எஸ்எம்எஸ் பெறுவார்கள்.
90 நாட்களுக்கு 2GB தினசரி டேட்டா மற்றும் 20 GB கூடுதல் டேட்டா கிடைக்கும். மேலும், இந்த பிளானின் கீழ் யூஸர்கள் அன்லிமிட்டட் கால்ஸ், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுவார்கள்.
ரூ.999 பிளானின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 98 நாட்களுக்கு 2GB தினசரி டேட்டா, அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் 100 தினசரி இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும்.
September 07, 2025 4:44 PM IST