• Login
Friday, October 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

“ஜியோ தனது இலக்கை அடைய உதவியது டிஜிட்டல் இந்தியாதான்” – ஜியோ பங்குப் பட்டியல் விழாவில் பிரதமர் மோடிக்கு அனந்த் அம்பானி நன்றி! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 30, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
“ஜியோ தனது இலக்கை அடைய உதவியது டிஜிட்டல் இந்தியாதான்” – ஜியோ பங்குப் பட்டியல் விழாவில் பிரதமர் மோடிக்கு அனந்த் அம்பானி நன்றி! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 28, 2026 1:40 PM IST

மும்பையில் நடைபெற்ற விழாவில் ஜியோ நிறுவனத்தின் பங்குப் பட்டியல் வெளியானது. அப்போது, ஜியோவின் வெற்றிக்கு டிஜிட்டல் இந்தியா திட்டம்தான் காரணம் என பிரதமர் மோடிக்கு அனந்த் அம்பானி நன்றி தெரிவித்தார்.

News18
News18

மும்பையில் இந்திய பங்குச்சந்தைகளில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனத்தை பட்டியலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டியலிடும் நிகழ்ச்சியை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தலைவி நீடா அம்பானி குத்து விளக்கு ஏற்றித் துவக்கி வைத்தனர்.

இதில் பேசிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநர் அனந்த் அம்பானி, ஒவ்வொருவரின் கையிலும் இணையம் இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு கிராமமும் உலகத்தோடு இணைந்திருக்க வேண்டும் என்ற கனவின் பெயர்தான் ஜியோ என்றார். ஒரு சாதாரண இந்தியராலும் அசாதாரணமான கனவுகளைக் காண முடியும் என்பதை தனது தாத்தா திருபாய் அம்பானி நிரூபித்துக் காட்டியதாகப் பெருமிதம் கூறினார். அப்போது முகேஷ் அம்பானி நெகிழ்ச்சியடைந்தார்.

முன்னதாக, ‘‘டிஜிட்டல் இந்தியா தான் ஜியோவின் இலக்கைத் தீர்மானித்தது’’ என்று பிரதமர் மோடிக்கு அனந்த் அம்பானி நன்றி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையே ஜியோவின் பயணத்திற்கு ஒரு தெளிவான இலக்கைக் கொடுத்தது என்றும் தெரிவித்த அனந்த் அம்பானி இந்தியாவின் டிஜிட்டல் கனவுக்கும், நாடு முழுவதும் இணைய இணைப்பை விரிவுபடுத்தும் ஜியோவின் முயற்சிக்கும் இடையே உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டினார்.

அனந்த் அம்பானி தனது பேச்சில், “எங்கள் ஜியோ நிறுவனத்திற்கு ஒரு தெளிவான இலக்கைக் கொடுத்த ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் தொலைநோக்குப் பார்வைக்காகவும், அவரது தொடர் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவிற்காகவும் நமது மதிப்பிற்குரிய பிரதமர் ஸ்ரீ நரேந்திர தாமோதர்தாஸ் மோடி ஜி அவர்களுக்கு எங்கள் ஆழமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மதிப்பிற்குரிய மோடி ஜி, உங்களுக்கு எங்கள் கோடான கோடி வணக்கங்கள்!” என்று நெகிழ்ச்சியாகக் கூறினார்.

சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்கள் உட்பட இந்தியா முழுவதும் டிஜிட்டல் வசதிகளைக் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டே ஜியோவின் பயணம் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்ட அனந்த் அம்பானி, ஜியோ தொடங்கப்பட்டதன் பின்னணியைப் பற்றி நினைவு கூர்ந்து, “ஒவ்வொருவர் கையிலும் இன்டர்நெட் இருக்க வேண்டும்; ஒவ்வொரு கிராமமும் உலகத்தோடு இணைய வேண்டும் என்பதுதான் நோக்கம். இந்த கனவின் பெயர்தான் ஜியோ” என்று கூறினார்.

இன்றைய சூழலில் கல்வி, தகவல் தொடர்பு, மருத்துவம் மற்றும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதில் இன்டர்நெட் எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துரைத்த அனந்த் அம்பானியின் உரை, கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த போதும், ஆன்லைன் வசதியால் மாணவர்கள் படிப்பைத் தொடர முடிந்தது என்பதையும் நினைவுபடுத்தியது. அதேபோல், தூரத்தைக் கடந்து குடும்பங்கள் வீடியோ கால் மூலம் இணைப்பில் இருக்க முடிந்ததையும் அவர் விவரித்தார். தொலைதூர இடங்களிலும் மருத்துவச் சேவை கிடைக்க இது உதவுகிறது. உதாரணத்திற்கு, மும்பையில் இருக்கும் ஒரு பெரிய டாக்டர், ராஜஸ்தானின் பாலி கிராமத்தில் உள்ள ஒரு தீவிர நோயாளியைக் காப்பாற்ற ஜியோவின் இணைப்பு வசதி உதவியாக இருக்கிறது. இவை அனைத்தும் இந்தியாவின் டிஜிட்டல் கனவுகளில் ஜியோ எவ்வாறு ஒன்றிணைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.

‘விக்சித் பாரத்’

எதிர்காலம் குறித்துப் பேசிய அனந்த் அம்பானி, நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது என்று நம்பிக்கை தெரிவித்தார். அதில், “எதிர்வரும் காலம் இந்தியாவின் காலம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்தியாவின் எதிர்காலம் இங்குள்ள இளைஞர்களின் கையில்தான் உள்ளது. வளர்ந்த இந்தியா (‘விக்சித் பாரத்’) எனும் கனவை நனவாக்குவதில், நாங்கள் எப்போதும் முன்னணியில் நிற்போம்; முழு மூச்சாக உழைப்போம்,” என்றார். தொடர்ந்து பேசிய அவர், 53 கோடி ஜியோ வாடிக்கையாளர்கள் வைத்த நம்பிக்கையே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்று கூறி அவர்களுக்கும், ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தார். “ஜியோவை உருவாக்கியது நீங்கள்தான். உங்கள் கனவுகளை நிஜமாக்குவதுதான் எங்கள் கனவு” என்றும் நெகிழ்ச்சியாகக் கூறினார்.

Read More

Previous Post

A9 வீதியில் பேருந்தில் பயணித்த பெண் திடீர் மரணம்

Next Post

சூடானில் நடந்த டிரோன் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலி…

Next Post
சூடானில் நடந்த டிரோன் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலி…

சூடானில் நடந்த டிரோன் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலி…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin