பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளை ஜியோ சினிமா ஆப் இலவசமாக வழங்கவுள்ளது. ஒலிம்பிக்கின் அனைத்து போட்டிகளையும் இந்த ஆப்-ல் எந்த கட்டணமும் இல்லாமல் பார்த்து மகிழலாம்.
கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கவுள்ளன. இந்த ஆண்டு போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
17 நாட்கள் நடைபெறும் இந்த போட்டித் தொடர் அடுத்த மாதம் 11 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த தொடரில் ஸ்போர்ட் கிளைம்பிங், ஸ்கேட் போர்டிங், சர்ஃபிங் உள்ளிட்ட போட்டிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
கோடை ஒலிம்பிக் போட்டிகள் ஸ்டேட் டி பிரான்ஸ் என்ற பகுதியில் நடத்தப்படவுள்ளது. இங்குதான் கடந்த 30 ஆண்டுகளுக்கும மேலாக ரக்பி, உல க தடகள சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் தொடரில் அதிகமான பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி தயாராகியுள்ளது. ஒட்டுமொத்தமாக ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா 35 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
முதன்முறையாக தங்க பதக்கத்தை 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் அபினவ் பிந்த்ரா கைப்பற்றினார். 2020 டோக்யோவில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார்.
நடப்பு ஆண்டில் பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி உள்ளிட்ட பல திறமை மிக்க வீரர் வீராங்கனைகள் அணியில் இருப்பதால், இந்தியா அதிகப்படியான பதக்கங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி முழுவதையும் ஸ்போர்ட்ஸ் 18 சானல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இந்த போட்டியை ஜியோ சினிமா மொபைல் ஆப்பில் இலவசமாக கண்டு மகிழலாம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)