• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜியோவின் பிரம்மாண்ட IPO அறிவிப்பு: ஒரு பங்கின் விலை ரூ. 1,065 முதல் ரூ. 1,119 வரை என நிர்ணயம்! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஜியோவின் பிரம்மாண்ட IPO அறிவிப்பு: ஒரு பங்கின் விலை ரூ. 1,065 முதல் ரூ. 1,119 வரை என நிர்ணயம்! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 15, 2026 3:06 PM IST

ஐபிஓ மூலம் 30 ஆயிரத்து 213 கோடி ரூபாய் நிதி திரட்டத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ என்ற பெருமையை இது பெற உள்ளது.

மாதிரி படம்
மாதிரி படம்

ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ பிளாட்ஃபார்ம் நிறுவனம் பொதுப் பங்கு வெளியிட உள்ள நிலையில், ஒரு பங்கின் விலை அதிகபட்சமாக 1,119 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரும் தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்ப நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம், தொடக்க நிலை பங்கு வெளியீட்டை மேற்கொள்ள உள்ளது. இதற்காக வரும் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கர் முதலீட்டாளர்கள் எனப்படும் வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உள்ளிட்டவை வரும் 19ஆம் தேதியே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு பங்கின் விலை 1065 முதல் 1,119 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபிஓ மூலம் 30 ஆயிரத்து 213 கோடி ரூபாய் நிதி திரட்டத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ என்ற பெருமையை இது பெற உள்ளது.

இதற்கு முன்னதாக, 2024ஆம் ஆண்டு ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஐபிஓ, நாட்டிலேயே மிகப்பெரியதாக இருந்தது. ரிலையன்ஸ் குழும ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு சிறப்புச் சலுகைகள் மற்றும் இடஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டுள்ளன.

2016ஆம் ஆண்டு தொலைத்தொடர்புத் துறையில் ஜியோ அடியெடுத்து வைத்தது. வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே எளிதாகக் கிடைத்து வந்த இணைய வசதி, ஏழை, எளிய மக்களுக்கும் குறைந்த விலையில் கிடைப்பதை ஜியா மூலம்  ரிலையன்ஸ் உறுதி செய்தது. தற்போது, 52 கோடி சந்தாதாரர்களைக் கொண்ட நிறுவனமாக ஜியோ பிளாட்ஃபார்ம் திகழ்கிறது.

மார்ச் 2026 உடன் முடிவடைந்த நிதியாண்டில், ஜியோ நிறுவனத்தின் வருவாய் 14.6% உயர்ந்து ரூ. 1,46,885 கோடியாக அதிகரித்துள்ளது. நிகர லாபம் 15.1% உயர்ந்து ரூ. 30,049 கோடியை எட்டியுள்ளது. மார்ச் 2026 காலாண்டு நிலவரப்படி, ஜியோ 52.4 கோடிக்கும் அதிகமான (524 million) வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஒரு பயனரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாய் (ARPU) ரூ. 214 ஆக உள்ளது.

தற்போது ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 66.43% பங்குகளையும், மெட்டா (Meta) மற்றும் கூகுள் (Google) நிறுவனங்கள் இணைந்து சுமார் 17.7% பங்குகளையும் வைத்துள்ளன. கோடக் மஹிந்திரா கேபிட்டல், மோர்கன் ஸ்டான்லி, கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளிட்ட 19 முன்னணி நிறுவனங்கள் இந்த பங்களிப்பு வெளியீட்டை நிர்வகிக்கின்றன.

Read More

Previous Post

கடலில் மிதக்கும் ஐபோன்கள்.. படகில் அள்ளி செல்லும் மக்கள்.. ஹார்முஸ் ஜலசந்தியில் போட்டா போட்டி | iPhones float in strait of Hormuz after cargo ship hits mine

Next Post

மாநிலங்களுக்கு நியாயமான முறையில் நிதி வழங்க சம்சூரி வலியுறுத்தல் – Malaysiakini

Next Post

மாநிலங்களுக்கு நியாயமான முறையில் நிதி வழங்க சம்சூரி வலியுறுத்தல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin