• Login
Thursday, February 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஜிம்பாப்வே அணியை எப்படி வீழ்த்தினால் இந்திய அணிக்கு செமி ஃபைனல் வாய்ப்பு? | T20 World Cup 2026 | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 26, 2026
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஜிம்பாப்வே அணியை எப்படி வீழ்த்தினால் இந்திய அணிக்கு செமி ஃபைனல் வாய்ப்பு? | T20 World Cup 2026 | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 26, 2026 12:37 PM IST

டி20 உலகக் கோப்பை தொடரில், வாழ்வா சாவா ஆட்டத்தில், இந்திய அணி இன்று ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. வெற்றியையும் தாண்டி, இந்திய அணிக்கு மேலும் சில விஷயங்கள் தேவைப்படுகின்றன.

Rapid Read
2007 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் சாம்பியன்... 2014-இல் ரன்னர் அப் என டி20 உலகக்கோப்பை தொடர்களில் கோலோச்சி வந்த இந்தியா, நடப்புத் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா, லீக் சுற்றில் 4 போட்டிகளிலும் வென்று சூப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது.
2007 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் சாம்பியன்… 2014-இல் ரன்னர் அப் என டி20 உலகக்கோப்பை தொடர்களில் கோலோச்சி வந்த இந்தியா, நடப்புத் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா, லீக் சுற்றில் 4 போட்டிகளிலும் வென்று சூப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது.

டி20 உலகக்கோப்பை தொடரின் 4 லீக் போட்டிகளிலும் தோல்வி காணாத இந்திய அணி சூப்பர்8 சுற்றில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மோசமாக தோல்வி அடைந்ததால் இந்திய அணியின் ரன்ரேட்டும் பாதளத்தில் உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சூப்பர் Eight சுற்றில் இதுவரை மேற்கு இந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் நெட் ரன்ரேட் அடிப்படையில் முதல் இரு இடங்களில் உள்ளன. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி வெல்வது மட்டுமின்றி நெட் ரன் ரேட்டையும் உயர்த்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

இந்திய அணியின் நெட் ரன் ரேட் தற்போது மைனஸ் 3.800 என உள்ளது. இதை பிளஸ் ஆக மாற்ற வேண்டுமானால், இன்று சில அதிரடிகளை காட்ட வேண்டும். அதாவது, முதலில் பேட்டிங் செய்தால், 77 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். 150 ரன்கள் இலக்கு என 2வது பேட்டிங் செய்தால், 11 ஓவர்களுக்குள் எட்ட வேண்டும். இன்றைய போட்டியில் மட்டுமல்ல, அடுத்து வரும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு என்ற இக்கட்டான நிலையில் உள்ளது இந்திய அணி.

அதுவும், தென் ஆப்ரிக்கா அணி மேற்கு இந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகளை வென்றால்தான் நமக்கு வாய்ப்பு. மொத்தத்தில் அரையிறுதி வாய்ப்பு என்பது இந்திய அணியின் வெற்றியை மட்டுமல்லாது, பிற அணிகளுக்கு இடையேயான போட்டியையும் சார்ந்துள்ளது. இதனிடையே, இந்திய அணியின் தொடக்க வரிசையில் 3 இடதுகை ஆட்டகாரர்கள் உள்ள நிலையில் சஞ்சு சாம்சனை சேர்க்க அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

தந்தைக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக ரிங்கு சிங் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், அவரும் இன்றைய போட்டியில் விளையாடுவாரா என தெரியவில்லை. இதேபோல வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் அக்ஷர் படேல் விளையாடலாம் என்றும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் இந்திய அணி, ஜிம்பாப்வேவை வீழ்த்த வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

First Published :

Feb 26, 2026 12:37 PM IST

Read More

Previous Post

ஆந்திராவை அதிரவைத்த கலப்பட பால் விவகாரம்: மேலும் ஒருவர் உயிரிழந்த சோகம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Madurai Gold Rates Today: நகை வாங்குபவர்களுக்கு சின்ன ரிலீஃப்… மதுரையில் சரிந்த தங்கம் விலை…

Next Post
Madurai Gold Rates Today: நகை வாங்குபவர்களுக்கு சின்ன ரிலீஃப்… மதுரையில் சரிந்த தங்கம் விலை…

Madurai Gold Rates Today: நகை வாங்குபவர்களுக்கு சின்ன ரிலீஃப்… மதுரையில் சரிந்த தங்கம் விலை...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin