எஸ்பிஐ கிரெடிட் கார்டு சேவையில் முக்கிய மாற்றம்: வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல், தேர்ந்தெடுக்கப்பட்ட சப் பிராண்டட் கிரெடிட் கார்டுகளுடன் முன்னர் வழங்கப்பட்ட இலவச விமான விபத்து காப்பீட்டு தொகை ஆனது எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளில் கிடைக்காது. ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான இந்த காப்பீடு, யுசிஓ வங்கி, மத்திய வங்கி, கரூர் வைஸ்யா வங்கி மற்றும் அலகாபாத் வங்கி போன்ற வங்கிகளுடன் இணைந்து வழங்கப்பட்ட எலைட் (ELITE) மற்றும் ப்ரைம் (PRIME) கார்டுகளின் வழியாக கிடைத்தது. இந்த பலன் தற்போது நீக்கப்படுவதால் அடிக்கடி விமானங்களில் பயணிப்பவர்கள் பயணக்காப்பீட்டிற்கு கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும்.