ஜிந்துப்பிட்டி பகுதியில் நபர் ஒருவரைச் சுட்டுக் கொன்று, இரண்டு சிறுவர்களைக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று (03) கிராண்ட்பாஸ் காவல்துறைபிரிவில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
போதைப்பொருள்
இதன்போது அவரிடமிருந்து 11 கிராம் 830 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இக்கொலைச் சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

