சிங்கப்பூரில் நடந்த அதிரடி சோதனையில் பல்வேறு குற்றங்களுக்காக 2,000 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெறுகிறது.
அதாவது, 15 முதல் 84 வயதுக்குட்பட்ட 1,401 ஆண்களும் 1,044 பெண்களும் சந்தேக அடிப்படையில் விசாரிக்கப்படுகிறார்கள்.
இந்திய ஊழியர் மீது குற்றச்சாட்டு: துணைபோலிஸுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி.. செக் வைத்த போலீஸ்
கடந்த மே 20 முதல் ஜூலை 7 வரை நடத்தப்பட்ட பல்வேறு அமலாக்க சோதனை நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
என்னென்ன குற்றங்களை தடுக்க அமலாக்க சோதனை
- சட்டவிரோத குதிரை பந்தயம்
- மின்-வேப்பரைசர்கள்
- பதிவு பெறாத சுகாதாரப் பொருட்களின் விற்பனை
- பொது பொழுதுபோக்கு நிலையங்கள்
- மசாஜ் நிறுவனங்கள்
- ஹோட்டல்கள் மற்றும் சூதாட்ட இடங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள்
ஆகியவற்றிற்கு எதிராக இந்த அமலாக்க நடவடிக்கைகள் நடந்ததாக போலீசார் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவு முழுவதும் சட்டவிரோத மற்றும் குற்றச் செயல்களை முறியடிக்கும் சிங்கப்பூர் காவல் துறையின் தொடர் நடவடிக்கையில் இதில் ஒரு பகுதி என்று SPF செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
கொட்டும் மழையில் புல்வெளியில் உணவு… வெளிநாட்டு ஊழியரின் வாழ்க்கை இது தானா?
4,000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை
சிஐடி மற்றும் ஏழு காவல் நிலப் பிரிவுகளைச் சேர்ந்த 4,020க்கும் மேற்பட்ட அதிகாரிகள், சுமார் 1,230க்கும் மேற்பட்ட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையில் 14,300 பேர் சோதனை செய்யப்பட்டதில் 932 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெண்கள் சம்பந்தப்பட்டவை
மே 20 முதல் ஜூன் 30 வரை, ஜாலான் பெசார், புக்கிட் பாடோக், கேலாங், ஜூரோங் ஈஸ்ட், யுஷுன் மற்றும் ஜூ சியாட் உள்ளிட்ட பல இடங்களில் இந்த சோதனை நடந்தது.
இதில் 19 முதல் 63 வயதுக்குட்பட்ட இரண்டு ஆண்களும் 316 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Top Photo: SPF

