கோலாலம்பூர்:
ஜார்ஜ்டவுனில் குடிநுழைவுத்துறையினர் நடத்திய சோதனையில் 15 வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டதாக பினாங்கு குடிநுழைவு துறை தலைவர் நூர் சுல்பா இப்ராஹிம் கூறினார்.
நேற்று இரவு ஜார்ஜ்டவுன், லெபுஹ் ஃபர்குஹரில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் நடந்த சோதனையில், 25 முதல் 30 வயதுக்கு உட்பட்ட 15 பெண்கள் கைது செய்யப்பட்டனர் என்று அவப் சொன்னார்.
இவர்கள் தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், மலேசியாவில் வாழ்வதற்கு வழங்கப்பட்ட விசாவில் கால அவகாசத்தை தாண்டி தங்கியிருப்பது, ஆவணங்கள் இல்லாதது, பாஸ்போர்ட், நுழைவு அட்டையை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களைச் செய்திருப்பது கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.


