• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜான்வி கபூரின் வருங்கால கணவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 14, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஜான்வி கபூரின் வருங்கால கணவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: நடிகை ஜான்வி கபூர் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியாவை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், ஜான்வி கபூர் அதை கன்ஃபார்ம் பண்ணும் விதமாக அப்பா போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடிப்பில் வெளியான மைதான் படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது ‘ஷிகு’ என பெயர் பொறிக்கப்பட்ட செயினை கழுத்தில் அணிந்து அனைவருக்கும் தனது காதலரை அறிவித்து விட்டார்.

விரைவில் ஜான்வி கபூருக்கும் ஷிகர் பஹாரியாவுக்கும் திருமணம் நடைபெறப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில், இருவரும் திருப்பதிக்கு சென்று வழிபாடு செய்து வந்த நிலையில், திருப்பதியில் தான் இருவரது திருமணமும் நடைபெறும் என்றும் கூறுகின்றனர். ஆந்திராவில் அதிக ஆர்வம் செலுத்தத் தொடங்கி உள்ள ஜான்வி கபூர் ஜூனியர் என்டிஆர் படத்தை தொடர்ந்து ராம்சரண் படத்திலும் நடித்து வருகிறார்.

போனி கபூர் பொண்ணு: நடிகை ஸ்ரீதேவிக்கும் தயாரிப்பாளர் போனி கபூருக்கும் மகளாக பிறந்த ஜான்வி கபூர் இளம் நடிகையாக சினிமாவில் கலக்கி வருகிறார். அம்மா ஸ்ரீதேவி உயிரிழந்த 2018ம் ஆண்டு தான் அவருடைய மகள் ஜான்வி கபூர் சினிமாவில் தடக் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஜான்வி கபூரை தொடர்ந்து அவரது சகோதரி குஷி கபூரும் நடிகையாக மாறியுள்ளார். மகள்களின் நடிப்பை பார்க்க ஸ்ரீதேவிக்கு கொடுத்து வைக்கவில்லை.

ஜூனியர் என்டிஆர், ராம்சரண்: இந்தியில் ஜான்வி கபூர் பல படங்களில் நடித்து வந்தாலும் அவருக்கு பெரிய நடிகர்கள் பட வாய்ப்புகளை வழங்கவில்லை. பாலிவுட்டில் ஜான்வி கபூர் நடித்த படங்கள் எல்லாம் பெரிதாக போகாத நிலையில், டோலிவுட்டில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பை மிஸ் செய்யாமல் கப்பென பிடித்துக் கொண்டு தேவரா மற்றும் ஆர்சி 16 படங்களில் நடித்து வருகிறார்.

ஜான்வி கபூர் காதலர்: மகாராஷ்ட்ராவின் முன்னாள் முதல்வர் சுசில்குமார் ஷிண்டேவின் பேரனும் பிரபல தொழிலதிபரான சஞ்சய் பஹாரியாவின் மகனுமான ஷிகர் பஹாரியாவும் தொழிலதிபராக வலம் வருகிறார். இளம் வயதில் இருந்தே ஜான்வி கபூருடன் பள்ளி படிப்பை படித்த ஷிகர் அவரை காதலித்து வந்த நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சொத்து மதிப்பு: தாத்தா, அப்பா சொத்து மதிப்பெல்லாம் பல கோடி இருக்கும் நிலையில், தனியாக சம்பாதித்து ஷிகர் பஹாரியாவே சுமார் 84 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் பிடித்தாலும் பிடித்தார் பெரிய புளியங்கொம்பாகவே பிடித்துள்ளார் என பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

 ஸ்ரீதேவியின் சொத்து மதிப்பு பல நூறு கோடி இருக்கும் என்கின்றனர். போனி கபூர் பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் நிலையில், சினிமாவில் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடித்து வரும் ஜான்வி கபூரும் தனியாக சம்பாதித்து கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கிறார் என்றே கூறுகின்றனர்.



Read More

Previous Post

இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இரான்; எச்சரிக்கும் அமெரிக்கா- நிலவும் போர்ச்சூழலால் பதற்றம்! | Iran fired armed drones and missiles against Israel

Next Post

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருடப் பிறப்பு பூஜை வழிபாடுகள்

Next Post
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருடப் பிறப்பு பூஜை வழிபாடுகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருடப் பிறப்பு பூஜை வழிபாடுகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin