ஜாசின்:
நேற்று மதியம் பத்து காஜா அருகே அலோர் காஜா-மலாக்கா தெங்கா-ஜாசின் (AMJ) நெடுஞ்சாலையில், யூ-டர்ன் செய்யும் லோரி மீது கார் மோதியதில் இரண்டு மாத பெண் குழந்தை இறந்தத, அதன் பெற்றோர் காயமடைந்தனர்.
தலையில் பலத்த காயம் ஏற்பட்ட குழந்தை, மூவாரில் உள்ள சுல்தானா பாத்திமா சிறப்பு மருத்துவமனையில் (HPSF) அனுமதிக்கப்பட்டு, இரண்டு மணி நேரத்திற்கும் மேலான அவசர சிகிச்சைக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது, அதே நேரத்தில் அவரது பெற்றோருக்கு தலையில் காயம் ஏற்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்து பிற்பகல் 2.15 மணியளவில் நடந்ததாக மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் முகமட் ருஸ்லி மாட் தெரிவித்தார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, அந்தக் குடும்பம் AMJ மெர்லிமாவ் போக்குவரத்து சமிக்ஞை விளக்குத் திசையில் இருந்து பத்து கஜா நோக்கி ஒரு காரில் பயணித்துக் கொண்டிருந்தது, விபத்து நடந்த இடத்தில், 33 வயது நபர் ஓட்டிச் சென்ற லோரி வலதுபுறப் பாதையில் இருந்து AMJ இல் உள்ள போக்குவரத்து சமிக்ஞை விளக்கு நோக்கி U- ரேன் செய்ய முயன்றபோது, பின்புற வலது பக்கத்தில் கார் மோதியது,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த மோதலில் காரில் இருந்த அனைவருக்கும் காயம் ஏற்பட்டது, அவர்கள் மேல் சிகிச்சைக்காக HPSF மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். லோரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.
“முதற்கட்ட விசாரணையில் கார் கட்டுப்பாட்டை இழந்து லோரியின் பாதையில் திரும்பியதாக நம்பப்படுகிறது என்று அவர் சொன்னார்.
1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரணைகள் நடந்து வருகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.


