Last Updated:
நிர்வாகக் கமிட்டி கூடி ஆலோசனை மேற்கொண்டதில் மார்டென் கோரிக்கையை ஏற்பதென்று முடிவு செய்யப்பட்டது.
ஜாகுவார் லேண்ட் ரோயர் நிறுவனத்தின் முதல் இந்திய தலைமை செயல் அதிகாரியாக தமிழ்நாட்டை சேர்ந்த பாலாஜியை நிர்வாகக்குழு நியமித்துள்ளது.
ஜே.எல்.ஆர். என பரவலாக அழைக்கப்படும் ஜாகுவார் லேண்ட் ரோயர் என்கிற நிறுவனம் டாடா மோட்டார்ஸுக்கு சொந்தமானதாகும். பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் 2008 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
சொகுசு வாகனங்கள், மோட்டார் ஸ்போர்ட்ஸ் கார்கள் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அட்ரியான் மார்டெல் செயல்பட்டு வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக அவர் இந்த பொறுப்பில் இருந்து வரும் நிலையில் தான் ஓய்வு பெறுவதாக தனது விருப்பத்தை வெளியிட்டார்.
இதுகுறித்து நிர்வாகக் கமிட்டி கூடி ஆலோசனை மேற்கொண்டதில் மார்டென் கோரிக்கையை ஏற்பதென்று முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய தலைமை செயல் அதிகாரியாக பி.பி. பாலாஜியை நியமிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பொறுப்பை ஏற்கும் முதல் இந்தியர் பாலாஜி என்பது கவனிக்கத்தக்கது. தற்போது அவர் டாடா குழுமத்தின் தலைமை நிதி நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
வரும் நவம்பர் மாதத்தில் இருந்து அவர் ஜே.எல்.ஆர். நிறுவத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பை ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஒப்பந்தம் முடியும் வரையில் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் நீடிப்பார்.
டாடா குழுமத்துடன் நீண்ட ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பாலாஜிக்கு இருப்பதால் அவரது நியமனம் நிறுவனத்திற்கு ஏராளமான பலன்களை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பாலாஜி கூறுகையில், ஜேஎல்ஆர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பு கிடைத்திருப்பதை சிறப்பானதாக கருதுகிறேன். எனது குழுவுடன் இணைந்து நிறுவனத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்வேன் என்று தெரிவித்தார்.
August 05, 2025 9:52 PM IST


