Last Updated:
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ளது
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை கேப்டன் சூர்யகுமார் யாதவ் மிகுந்த கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என பிசிசிஐ தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் விளையாடி முடித்துள்ளது. இவற்றில் டெஸ்ட் போட்டி தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியும், ஒருநாள் தொடரை இந்திய அணியும் கைப்பற்றின.
அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரராக பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே அவருக்கு காயம் காரணமாக சில அறுவை சிகிச்சைகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பும்ராவை மிகுந்த கவனத்துடன் கேப்டன் சூரியகுமார் யாதவ் பயன்படுத்த வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ளது.
December 08, 2025 8:58 PM IST


