ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் டூல் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதல் வெடித்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குல்காம் மாவட்டத்தின் அகல் காடுகளில் பயங்கரவாதிகளுடனான கடுமையான துப்பாக்கிச் சூட்டில் லான்ஸ் நாயக் உள்பட 2 ராணுவ வீரர்கள் பலியான, ஒரு நாள் கழித்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
கிஷ்த்வார் மாவட்டத்தின் மலைப் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியபோது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர், அங்கு இரண்டு பேர் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் துப்பாக்கிச் சூடு தொடங்கியது.

