Last Updated:
ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மோசமானது என டொனால்டு டிரம்ப் கூறினார். இந்தியா, பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருப்பதாகவும், எல்லை பதற்றத்தை சரிசெய்வார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
“ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மோசமான ஒன்று” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தான் இந்தியாவுடனும், பாகிஸ்தானுடனும் மிக நெருக்கமாக இருப்பதாக கூறினார். மேலும் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றங்கள் நீண்ட காலமாகத் தொடர்வதாகவும், இரு தரப்பினரும் இந்தப் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்வார்கள் என நம்புவதாகவும் கூறினார்.

“ஆயிரம் ஆண்டுகளாக காஷ்மீர் போராட்டத்தைக் கொண்டுள்ளது. எல்லை பதட்டத்தை சரிசெய்வதற்கான வழியை கண்டுபிடித்துவிடுவார்கள் என நம்புகிறேன். காஷ்மீர் எல்லையில் 1,500 ஆண்டுகளாக பதற்றம் உள்ளது, அவர்கள் அதை எப்படியாவது சரிசெய்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.
அதுமட்டுமன்றி இரு தலைவர்களையும் நான் அறிவேன் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.
April 26, 2025 6:28 AM IST
”ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் நடந்த தாக்குதல் மோசமான ஒன்று “ – அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து..!


