Last Updated:
ஜம்மு-காஷ்மீரில் கானி டாப் பகுதியில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 10 வீரர்கள் உயிரிழந்தனர். குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த விபத்து அதிர்ச்சி ஏற்படுத்தியது.
ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 வீரர்கள் உயிரிழந்தனர்.
வரும் 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், எல்லைப் பகுதியில் ரோந்துப் பணிகளில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் டோடா பகுதியில் உள்ள பதேர்வா – சாம்பா இடையேயான சாலையில் கானி டாப் என்ற இடத்தில் 17 ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததாக தெரிகிறது.
இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 10 ராணுவ வீரர்களின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
விபத்து நடைபெற்ற இடத்துக்கு ராணுவ அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசு அதிகாரிகள் விரைந்து மீட்புப் பணிகளை ஆய்வு செய்தனர். குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Jammu,Jammu,Jammu and Kashmir


