Last Updated:
புனித சுடரின் காரணமாக ரெய்காடோ மண்டபத்தில் தீப்பிடித்திருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் அதிர்ச்சி.
ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தில் உள்ள டைஷோயின் கோயிலில் உள்ள ரெய்காடோ மண்டபத்தில் கி.பி. 806 ஆம் ஆண்டில் ஒரு புத்த பிக்குவால் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. அந்த தீ, இப்போதும் அதாவது 1,200 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எரிந்து வந்ததாக நம்பப்படுகிறது. 1945 ஆம் ஆண்டு அணுகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் ஹிரோஷிமா அமைதி பூங்காவில் அணையாத சுடரை ஏற்றுவதற்கும் இந்த தீ பயன்படுத்தப்பட்டது. இதனால், டைஷோயின் கோயிலின் விளக்கு தீ புனித தீயாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டைஷோயின் கோயிலில் நேற்று திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர்.
எனினும் தீ விபத்தில் அந்த கோயில் முற்றிலும் தீக்கிரையானது. புனித சுடரின் காரணமாக ரெய்காடோ மண்டபத்தில் தீப்பிடித்திருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
May 22, 2026 10:23 AM IST

