அவர் பேசுகையில், இன்று, இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக உள்ளது. மிக விரைவில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறப் போகிறது. ஜப்பானின் அறிவும், இந்தியாவின் திறமையும் இணைந்து மிகச் சிறந்த கூட்டாண்மையை உருவாக்க முடியும்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான, செயற்கை நுண்ணறிவு, செமிக்ன்டக்டர், குவாண்டம் கணினி, உயிரி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆகியவற்றில் இந்தியா மிகச் சவாலான மற்றும் லட்சிய முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஜப்பானிய வணிகத்தை தெற்கு உலகிற்கு கொண்டு வருவதற்கான ஊக்கியாக இந்தியா இருக்கும். இந்தியாவும் ஜப்பானும் இணைந்து ஆசிய நாடுகளின் இந்த நூற்றாண்டை நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்புக்கானதாக மாற்றும்.
ஏற்கனவே, இந்தியாவும் ஜப்பானும் இணைந்து, ரோபோடிக்ஸ், செமிகன்டக்டர், கப்பல் கட்டுதல் மற்றும் அணுசக்தி துறைகளில் வெற்றிகரமான ஆட்டோமொபைல் கூட்டாளிகளாக செயல்பட்டு வெற்றிநடை போடுகின்றன என்றும் பிரதமர் மோடி கூறினார்.

