Last Updated:
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து உலக சாம்பியன் யமகுச்சியை வீழ்த்தி பட்டம் வென்றார். ஜப்பான் ஓபனை வென்ற முதல் இந்திய வீராங்கனை சிந்து.
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் உலக சாம்பியன் யமகுச்சியை வீழ்த்தி, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வரலாறு படைத்துள்ளார்.
ஜப்பான் ஓபன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெறுமையைப் பெற்ற பி.வி.சிந்து, டோக்கியோவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், 3 முறை உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனை யமகுச்சியை பி.வி.சிந்து எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் சற்று பின்னடைவை சந்தித்தாலும், மீண்டெழுந்த பி.வி.சிந்து 21-க்கு 17, 21-க்கு 17 என்ற கேம்கள் கணக்கில் யமகுச்சியை அவரது சொந்த மண்ணில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெற்றார்.
இதன்மூலம், ஜப்பான் ஓபனை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை பி.வி.சிந்து படைத்துள்ளார். 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு எந்த தொடரிலும் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்த பி.வி.சிந்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளார்.


