Last Updated:
மேற்கு வங்கத்தில் தனக்கு முறையாக வரவேற்பு அளிக்கப்படவில்லை என குடியரசுத் தலைவர் குற்றஞ்சாட்டிய நிலையில், பாஜகவின் பேச்சைக் கேட்டு தேர்தல் நேரத்தில் அரசியல் விளையாட்டை ஆட வேண்டாம் என மம்தா பானர்ஜி பதிலளித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வரவேற்பு, சர்வதேச சந்தால் மாநாட்டின் இடம் மாற்றம் குறித்து இன்று மாலைக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு மேற்கு வங்க தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜலிங்கில் சர்வதேச பழங்குடியின மக்கள் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, ஒரு மாநிலத்திற்கு குடியரசுத் தலைவர் பயணம் செய்யும் போது, முதலமைச்சர், அமைச்சர்கள் வரவேற்பு அளிப்பது வழக்கம், ஆனால் மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா தனக்கு வரவேற்பு அளிக்கவில்லை எனவும், ஒருவேளை அவர் தன் மீது கோபமாக இருக்கிறாரா எனத் தெரியவில்லை எனவும் தெரிவித்தார். மாநாட்டிற்கான இடம் மாற்றப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், பாஜகவின் பேச்சை கேட்டு தேர்தல் நேரத்தில் குடியரசுத் தலைவர் அரசியல் விளையாட்டை விளையாட வேண்டாம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், சிலிகுரி மாநகராட்சி மேயர் மற்றும் டார்ஜிலிங், சிலிகுரி காவல் ஆணையர்கள் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவருக்கு முறைப்படி வரவேற்பு அளித்ததாகவும், தேர்தல் நேரத்தில் பாஜக தனது அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவதாகவும் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியிருந்தார்.
Union Home Secretary Govind Mohan has sought a detailed report from the West Bengal Chief Secretary by 5 pm today regarding lapses in the prescribed protocol for receiving President Droupadi Murmu, the change of venue of the International Santal Conference in Darjeeling district,… pic.twitter.com/zJvVn1QTxp
— ANI (@ANI) March 8, 2026
இந்நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை வரவேற்பதற்கான பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறையில் உள்ள குறைபாடுகள், டார்ஜிலிங் மாவட்டத்தில் சர்வதேச சந்தால் மாநாட்டின் இடம் மாற்றம் மற்றும் பிற தொடர்புடைய ஏற்பாடுகள் குறித்து மேற்கு வங்க தலைமைச் செயலாளரிடம் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் இன்று மாலை 5 மணிக்குள் விரிவான அறிக்கையைக் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Mar 08, 2026 10:56 AM IST


