Last Updated:
கர்நாடகா அரசு பல்வேறு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதால் சின்னசாமி மைதானத்தை பயன்படுத்த ஆர்சிபிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தங்களது ஹோம் கிரவுண்டை இறுதி செய்ய பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு பிசிசிஐ கெடு விதித்துள்ளது.
இது சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஆணைய மன்றக் கூட்டத்தில் கூறப்பட்டதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன, ஏனெனில் இரு அணிகளும் தங்கள் சொந்த மைதானங்களில் போட்டிகளை நடத்துவது குறித்து நிலையற்ற தன்மையை சந்திக்கின்றன. ஆர்சிபி அணி பெங்களுரூவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் கர்நாடகா அரசு பல்வேறு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதால் சின்னசாமி மைதானத்தை பயன்படுத்த ஆர்சிபிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தை பயன்படுத்தினால் மைதானம் மட்டுமின்றி சுற்றி உள்ள சாலைகளிலும் பாதுகாப்புக்கான பொறுப்பை அணி நிர்வாக்ம ஏற்க வேண்டும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. மேலும், DJ பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் மற்றும் தீயணைப்பு படையணி பிரிவு அருகில் இருக்க வேண்டும் போன்ற கூடுதல் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே சின்னசாமி மைதானத்தை சொந்த கிரவுண்டாக தேர்வு செய்வதில் ஆர்சிபி அணி தயக்கம் காட்டி வகிறது.
ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்தல் இன்னும் நடத்தப்படாததால் ஜெய்பூரில் உள்ள மைதானத்தை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. இந்நிலையில் வரும் 27ஆம தேதிக்குள் அந்த அணிகள் தங்களது சொந்த மைதானம் குறித்து முடிவெடுக்க பிசிசிஐ கெடு விதித்துள்ளது.


