
2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை இடம்பெற்ற காலப்பகுதியில், இலங்கைக்கு மொத்தமாக 2 இலட்சத்து 77 ஆயிரத்து 327 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் அதிக அளவில் இந்தியாவிலிருந்தே சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து மட்டும் 52,061 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அதேவேளை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 29,540 பேரும், ரஷ்யாவிலிருந்து 27,134 பேரும், ஜெர்மனியிலிருந்து 17,776 பேரும், சீனாவிலிருந்து 14,003 பேரும், பிரான்ஸிலிருந்து 13,569 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 11,172 பேரும் இலங்கையை சுற்றுலா நோக்கில் பார்வையிட்டுள்ளனர்.

