புதிய தலைமுறைக்கு வழிவிடுவதே அமெரிக்க ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான சிறந்த வழி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்ட அதிபர் ஜோ பைடன், போட்டியில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தார். இது குறித்து நாட்டு மக்களிடையே முதன்முறையாக பேசிய அதிபர் ஜோ பைடன், பொதுவாழ்வில் நீண்ட அனுபவம் கொண்டவர்களுக்கு ஒரு நேரம், காலம் உள்ளது போல், இது புதிய தலைமுறைக்கான நேரம் என்று கூறினார்.
அதிபர்களாக உள்ளவர்கள் நாட்டின் ராஜாக்கள் கிடையாது என்று தனக்கு முன்பு இருந்த அமெரிக்க அதிபர்கள் சுட்டிக்காட்டி உள்ளதாக கூறிய பைடன், அதிபர் தேர்தலில் இருந்து தாம் விலகியது ஒரு ஜனநாயக நடவடிக்கை என்று விளக்கம் தந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தனக்கு பதிலாக போட்டியிடும் கமலா ஹாரிஸ், திறமைசாலி என்றும் கடின உழைப்பாளி என்றும் பைடன் புகழாரம் சூட்டினார்.
இதையும் படிங்க: 2 ஆண்டுகளாக கப்பலில் வாழும் இளம்பெண்… என்ன காரணம்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
அமெரிக்க அதிபராக தனது செயல்பாடு, அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான தனது பார்வை போன்றவற்றை எடுத்துக் கொண்டால் இரண்டாவது முறையாக தான் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதி உள்ளது. அமெரிக்க மக்களுக்காக பணியாற்றுவதில் நான் பலம் கொள்கிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், ஜனநாயகத்தை காக்க இந்த முடிவை எடுத்துள்ளேன். அடுத்த ஆறு மாதங்கள் அதிபராக எனது பணியை செய்வேன்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)