• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஜடேஜா, வாஷி அபார சதம்: டிராவில் முடிந்த மான்செஸ்டர் போட்டி! | Jadeja and Washington sundar scores century team india draws Manchester test

GenevaTimes by GenevaTimes
July 27, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஜடேஜா, வாஷி அபார சதம்: டிராவில் முடிந்த மான்செஸ்டர் போட்டி! | Jadeja and Washington sundar scores century team india draws Manchester test
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மான்செஸ்டர்: இங்கிலாந்து அணி உடனான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியை டிரா செய்துள்ளது இந்திய அணி. வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா இணைந்து 203 ரன்கள் கூட்டணி அமைத்தனர். இருவரும் சதம் கடந்து அசத்தினர்.

ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து 669 ரன்களும் எடுத்தன. 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது.

இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் இணைந்து 188 ரன்கள் கூட்டணி அமைத்தனர். ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் முதல் செஷனில் ராகுல் 90 ரன்களிலும், கில் 103 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் இணைந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணைந்து 203 ரன்களுக்கு வலுவான கூட்டணி அமைத்தனர். இருவரும் சிறப்பாக ஆடி சதம் கடந்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் 143 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 425 ரன்கள் எடுத்தது இந்தியா. ஆட்டத்தில் முடிவு எட்ட வாய்ப்பு இல்லை என்ற நிலையில் முடித்துக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஆட்டம் டிரா ஆனது. வாஷிங்டன் சுந்தர் 101 ரன்கள், ஜடேஜா 107 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் வாஷிங்டன் சுந்தருக்கு இது முதல் சதம் ஆகும். இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த தொடரின் கடைசி போட்டி வரும் 31-ம் தேதி ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.



Read More

Previous Post

கர்நாடகாவில் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக உண்டு உறைவிட பள்ளிகள் தொடக்கம் | Residential schools for children of construction workers in 31 districts of Karnataka

Next Post

கம்போடியா – தாய்லாந்து தலைவர்கள் மலேசியாவில் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக சந்திக்கவிருக்கின்றனர் | Makkal Osai

Next Post
கம்போடியா – தாய்லாந்து தலைவர்கள் மலேசியாவில் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக சந்திக்கவிருக்கின்றனர் | Makkal Osai

கம்போடியா - தாய்லாந்து தலைவர்கள் மலேசியாவில் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக சந்திக்கவிருக்கின்றனர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin