Last Updated:
சிஎஸ்கே அர்வம் காட்டிய நிலையில் லக்னோவும் போட்டி போட்டது. லக்னோ பின்வாங்கிய நிலையில் ராஜஸ்தான் ரேஸில் நுழைந்தது.
கடும் போட்டிக்கு மத்தியில் பிரபல ஆல் ரவுண்டரை சென்னை அணி ரூ. 14.20 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரை முன்னிட்டு தற்போது மினி ஏலம் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் தாங்கள் விடுவித்த மற்றும் தக்க வைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டன.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு அணிகளிலும் மீதம் இருக்கும் இத்தொகையை வைத்து தற்போது மினி ஏலம் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக கொல்கத்தா அணியிடம் 64 கோடியே 30 லட்சம் ரூபாயும், சென்னை அணியிடம் 43 கோடியே 40 லட்சம் ரூபாயும் இருப்பில் இருந்தன.
இந்த ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் ரூ. 25 கோடியே 20 லட்ச ரூபாய்க்கும், இலங்கை மற்றும் சென்னை அணியின் முன்னாள் பவுலர் மதிஷா பதிரனா ரூ. 18 கோடிக்கும் வாங்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து ஏலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல் ரவுண்டர் பிரசாந்த் வீரை வாங்குவதற்கு ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டின.
ஆல்ரவுண்டர் பிரஷாந்த் வீரை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அர்வம் காட்டிய நிலையில் லக்னோவும் போட்டி போட்டது. லக்னோ பின்வாங்கிய நிலையில் ராஜஸ்தான் ரேஸில் நுழைந்தது. ஆனால் சிஎஸ்கே பிரஷாந்தை எடுக்க மிகவும் தீவிரம் காட்டியதால் ஏலத்தொகை ரூ.6 கோடியை கடந்து சென்றது.
December 16, 2025 5:25 PM IST


