• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஜடேஜாவின் போராட்டத்துக்கு பலன் இல்லை: லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி! | Ravindra Jadeja s effort went vain India lose by 22 runs lords test

GenevaTimes by GenevaTimes
July 15, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஜடேஜாவின் போராட்டத்துக்கு பலன் இல்லை: லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி! | Ravindra Jadeja s effort went vain India lose by 22 runs lords test
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ரவீந்திர ஜடேஜா கடைசி வரை போராடி 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களும், இந்தியா 387 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டத்தில் 62.1 ஓவர்களில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 40. பென் ஸ்டோக்ஸ் 33, ஹாரி புரூக் 23 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து 193 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​திய அணி 4-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 17.4 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 58 ரன்​கள் எடுத்​தது. யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 0, கருண் நாயர் 14, கேப்​டன் ஷுப்​மன் கில் 6, ஆகாஷ் தீப் 1 ரன்​களில் நடையை கட்​டினர். கே.எல்​.​ராகுல் 33 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.

வெற்​றிக்கு மேற்​கொண்டு 135 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை இந்​திய அணி தொடர்ந்து விளை​யாடியது. ரிஷப் பந்த் 12 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 9 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோப்ரா ஆர்ச்​சர் பந்​தில் ஆஃப் ஸ்டெம்பு சிதற போல்​டா​னார். இதைத் தொடர்ந்து கே.எல்​.​ராகுல் 58 பந்​துகளில், 6 பவுண்​டரி​களு​டன் 39 ரன்​கள் எடுத்த நிலை​யில் பென் ஸ்டோக்ஸ் பந்​தில் எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார்.

இதன் பின்​னர் களமிறங்​கிய வாஷிங்​டன் சுந்​தர் 4 பந்​துகளை சந்​தித்த நிலை​யில் ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் ஜோப்ரா ஆர்ச்​சர் வீசிய பந்​தில் அவரிடமே பிடி​கொடுத்து நடையை கட்​டி​னார். 23 பந்​துகள் இடைவெளி​யில் இந்த 3 விக்​கெட்​களை​யும் வீழ்த்தி இந்​திய அணிக்கு கடும் அழுத்​தத்தை உரு​வாக்​கினர் இங்​கிலாந்து பந்து வீச்​சாளர்​கள். 8-வது விக்​கெட்​டுக்கு களமிறங்​கிய நித்​திஷ் குமார் ரெட்​டி, ரவீந்​திர ஜடேஜாவுடன் இணைந்து தடுப்​பாட்​டத்​தில் கவனம் செலுத்​தி​னார்.

30 ரன்​கள் சேர்த்த இந்த ஜோடியை கிறிஸ் வோக்ஸ் பிரித்​தார். நித்​திஷ் குமார் ரெட்டி 53 பந்​துகளில், ஒரு பவுண்​டரி​யுடன் 13 ரன்​கள் சேர்த்த நிலை​யில் கிறிஸ் வோக்ஸ் பந்​தில் விக்​கெட் கீப்​பர் ஜேமி ஸ்மித்​திடம் பிடி​கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். மதிய உணவு இடைவேளை​யில் இந்​திய அணி 39.3 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 112 ரன்​கள் எடுத்​திருந்​தது. ஜடேஜா 17 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தார்.

மதிய உணவு இடைவேளைக்கு பின்​னர் இந்​திய அணி தொடர்ந்து விளை​யாடியது. கைவசம் 2 விக்​கெட்​கள் மட்​டுமே இருக்க வெற்​றிக்கு

மேலும் 81 ரன்​கள் தேவை என்ற நிலையில் ஜடேஜா, ஜஸ்​பிரீத் பும்​ரா​வுடன் இணைந்து போராடி​னார். 9-வது விக்​கெட்​டுக்கு 35 ரன்​கள் சேர்க்​கப்​பட்ட நிலை​யில் இந்த ஜோடி பிரிந்​தது.

ஜஸ்​பிரீத் பும்ரா 54 பந்​துகளில், ஒரு பவுண்​டரி​யுடன் 5 ரன்​கள் எடுத்த நிலை​யில் பென் ஸ்டோக்ஸ் பந்தை மிட் ஆன் திசை​யில் தூக்கி அடித்​த​போது பதிலி வீரர் குக்​கிடம் கேட்ச் ஆனது. அப்​போது இந்​திய அணி​யின் வெற்​றிக்கு 46 ரன்​கள் தேவை​யாக இருந்​தது. எனினும் ஜடேஜா​வும், முகமது சிராஜும் பொறுமை​யாக விளை​யாடி ஆட்​டத்தை நகர்த்​திச் சென்​றனர். முகமது சிராஜ் 30 பந்​துகளில் 4 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஷோயப் பஷிர் பந்தை தடுப்​பாட்​டம் மேற்​கொண்ட போது போல்​டா​னார்.

முடி​வில் இந்​திய அணி 74.5 ஓவர்​களில் 170 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. ஜடேஜா 181 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 4 பவுண்​டரி​களு​டன் 61 ரன்​கள் சேர்த்து கடைசி வரை ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். இங்​கிலாந்து அணி சார்​பில் ஜோப்ரா ஆர்ச்​சர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை​யும், பிரைடன் கார்ஸ் 2 விக்​கெட்​களை​யும், கிறிஸ்​ வோக்​ஸ், ஷோயப் பஷிர் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர்.

22 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இங்​கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்​னிலை வகிக்​கிறது. 4-வது போட்​டி வரும்​ 23-ம்​ தே​தி ​மான்​செஸ்​டரில்​ தொடங்குகிறது.



Read More

Previous Post

பேராசிரியர் மீது புகார்.. கண்டுகொள்ளாத கல்லூரி நிர்வாகம்.. தனக்குத்தானே தீவைத்து மாணவி விபரீத முடிவு

Next Post

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: செப்டம்பரில் அடுத்தகட்ட பேச்சு

Next Post
ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: செப்டம்பரில் அடுத்தகட்ட பேச்சு

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: செப்டம்பரில் அடுத்தகட்ட பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin