கோலாலம்பூர்:
சௌக்கிட்டில் உள்ள ஒரு ஸ்பா மற்றும் சுகாதார மையத்தில் சந்தேகத்திற்குரிய பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும், 171 மலேசிய ஆண்கள் கைதுசெய்யப்பட்டனர், இருப்பினும் இந்த வழக்கில் தாங்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறியதை தொடர்ந்து, அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
மாஜிஸ்திரேட் நீதிமன்றம் போலீசாரின் தடுப்புக் காவல் விண்ணப்பங்களை நிராகரித்ததை அடுத்து 171 மலேசிய ஆண்களும் விடுவிக்கப்பட்டதாக கோலாலம்பூர் நகர காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 377 (இயற்கைக்கு மாறான உடலுறவு) மற்றும் 372 (விபச்சார சுரண்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கை விசாரிக்க போலீசார் முயன்றனர், ஆனாலும் “அவர்களில் ஒருவர் கூட தங்கள் சுரண்டலுக்கு ஆளானதாக ஒப்புக்கொள்ளவில்லை .. எனவே வழக்கு போய்விட்டது” என்று அவர் கூறினார்.
“கைது செய்யப்பட்ட அனைவரும் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 377/372 இன் கீழ் விசாரிக்கப்பட்டனர், ஆனால் காவல்துறையினர் அந்த திசையில் வழக்கைத் தொடர உதவ எந்த ஆதாரமும் இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.
விடுவிக்கப்பட்ட 171 பேரில் 103 பேர் மலாய்க்காரர்கள், மீதமுள்ளவர்கள் மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள், மேலும் ஆரம்பத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 208 பேரில் வெளிநாட்டினர் மட்டுமே இரண்டு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஃபாடில் கூறினார்.




