1 கிலோவாட் (kW) திறன் கொண்ட சூரிய மின்சக்தித் தகட்டிற்கு (solar panel) 30,000 ரூபாயும், 2 கிலோவாட் திறனுக்கு 60,000 ரூபாயும், 3 முதல் 5 கிலோவாட் வரையிலான திறனுக்கு 78,000 ரூபாயும் மானியமாக அரசாங்கம் வழங்குகிறது. சூரிய மின்சக்தித் தகடுகளின் ஆயுட்காலம் 25 ஆண்டுகள் வரை இருப்பதால், தற்போது பலர் தங்கள் வீடுகளின் கூரையில் இவற்றை நிறுவ விரும்புகின்றனர்.

