புதுதில்லி: மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ள சோனியா காந்திக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேரின் பதவிக்காலம் நிறைந்த நிலையில்,புதன்கிழமை மத்திய இணையமைச்சர் எல். முருகன் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 உறுப்பினர்கள் புதன்கிழமை பதவியேற்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்பட 14 உறுப்பினர்கள் வியாழக்கிழமை பதவியேற்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர்களுக்கு மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ள சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.