4
மஹியங்கனையில் கடந்த வார இறுதியில் ஆரம்பமான 48ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் மற்றும் மகளிர் சைக்கிளோட்டப் போட்டிகளில் முறையே சொமோத் டி சில்வா மற்றும் சந்தமினி ஆகியோர் வெற்றியீட்டினர்.
விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சுடன் இணைந்து இம்முறை போட்டிகளுக்கு நெஸ்ட்லே நெஸ்டமோல்ட் அனுசரணை வழங்குகிறது. இதில் ஆண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த சமோத் டி சில்வா வெற்றியீட்டிய நிலையில் பெண்கள் பிரிவிலும் மேல் மாகாணத்தின் டபிள்யு.ஏ.ஏ. சந்தமினி வெற்றியீட்டினார்.
முதல் இடம் பெற்றவர்களுக்கும் 50,000 ரூபா பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

&w=1200&resize=1200,675&ssl=1)