Last Updated:
ஜெமிமா தனது கிட்டாரை வாசிக்க, கவாஸ்கர் அவருடன் சேர்ந்து தாளம் தட்டிப் பாடுவது இந்திய மகளிர் அணிக்கு அவர் கொடுக்கும் மிகப்பெரிய மரியாதையாகப் பார்க்கப்படுகிறது.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில், தனது வாக்குறுதியை காப்பாற்றும் விதமாக நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் இணைந்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாடல் பாடியுள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 339 ரன் இலக்கை ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரது அசாத்திய பேட்டிங்கால் இந்திய அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
அப்போது, இந்திய அணி உலகக் கோப்பையை வென்றால் ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் இணைந்து பாடல் பாடுவேன் என்று இந்திய ஆடவர் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அறிவித்திருந்தார்.
இதற்கிடையே, மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. அதைத்தொடர்ந்து தனது வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு சுனில் கவாஸ்கர் ஜெமிமா ரோட்ரிக்ஸுக்கு கிரிக்கெட் பேட் வடிவிலான கிட்டாரை பரிசளித்து ஆச்சரியப்படுத்தினார். அதன்பின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் கிட்டார் வாசிக்க சுனில் கவாஸ்கர் பாடல் பாடினார்.
1983-ல் உலகக் கோப்பை வென்ற ஒரு ஜாம்பவானும், தற்போதைய இளம் நட்சத்திரமும் இணைந்து கொண்டாடுவது “கிரிக்கெட் என்ற விளையாட்டு தலைமுறைகளைக் கடந்தது” என்பதை நிரூபிக்கிறது என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
Jan 11, 2026 10:14 AM IST


