சொந்த வீடு வாங்க ஆசை இருந்தா இப்பவே வாங்கிடுங்க.. 2027ல் ஷாக் மேல ஷாக் காத்திருக்கு..!!
இந்தியா முழுவதும் கடந்த 2 வருடங்களாக பல்வேறு காரணத்தால் ரியல் எஸ்டேட் துறையில் மந்தமான வர்த்தக சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
இதேபோல் இந்தியா முழுவதும் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்தாலும் இதை இப்பண்டிகை காலத்தில் தள்ளுபடி கொடுத்தாவது விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உள்ளது.

இந்த நிலையில் 2027ஆம் ஆண்டு துவங்கும் போது சந்தையில் புதிய வீடுகளின் இருப்பு குறைந்து, டிமாண்ட் பெரியளவில் உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதற்கு 3 முக்கியமான காரணமும் உள்ளது.
முதல் காரணம், உலகம் முழுவதும் பங்குச்சந்தை பெரும் சரிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது, குறிப்பாக ஏஐ முதலீடுகளும், ஏஐ பங்குகளும் இந்த சரிவுக்கு முக்கியமான காரணமாக இருக்கும் என தீவிரமாக நம்பப்படும், இதே வேளையில் அடுத்த 3-6 மாதங்களில் ஏஐ பபுள் வெடிக்கும் என பல்வேறு கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதனால் 2027ஆம் ஆண்டு இறுதி வரையில் பங்குச்சந்தை மீண்டு வராது என திட்டவட்டமாகக் கூறப்படுகிறது.
இதனால் மொத்த முதலீட்டாளர்களும் பாதுகாப்பான மற்றும் நிலையான சொத்துக்கள் மீது தான் முதலீடு செய்வார்கள். அப்படிப் பார்க்கும் போது தங்கம் முக்கியமான முதலீட்டு வாய்ப்பாக இருக்கும், ஆனால் செபி புதிய முதலீடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டு இருக்கும் காரணத்தால் தங்கத்தில் பெரும் தொகையை முதலீடு செய்ய முடியாது.
தங்கமும், பங்குச்சந்தையும் இல்லாத போது அதிக லாபம் தரக்கூடிய அடுத்த முதலீட்டு ஆதாரம் ரியல் எஸ்டேட் ஆக மட்டுமே இருக்க முடியும்.
இரண்டாவது காரணம், அமெரிக்க நிறுவனத்தில் பணியாற்றும் லட்சக்கணக்கான NRI ஊழியர்களுக்கு கிரீன் கார்டு பெறுவதற்கான வாய்ப்புகள் மொத்தமாக முடங்கியிருக்கும் வேளையில், NRI-கள் சம்பாதிக்கும் பணத்தை அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்யமாட்டார்கள்.
இவர்களுக்கான ஒரே இடம் இந்திய ரியல் எஸ்டேட் சந்தை என்பதால் ஒட்டுமொத்த ப்ரீமியம் ரியல் எஸ்டேட் பிரிவுக்கு 2027ல் ஜாக்பாட் ஆக இருக்கப்போகிறது. இந்திய சந்தை பொருத்த வரையில் ரியல் எஸ்டேட் பிரிவில் நடக்கும் வர்த்தகத்தில் 10- 20 சதவீதம் என்ஆர்ஐ முதலீடுகள் இருந்து வருகிறது. 2027ல் இந்த அளவீடு பெரியளவில் உயரவும் வாய்ப்புள்ளது.
மூன்றாவது காரணம், இந்தியாவில் தற்போது டேட்டா சென்டர் மற்றும் சோலார் பார்க் ஆகியவை வேகமாக வளர்ச்சி அடையும் துறையாக இருக்கும் காரணத்தால் இரண்டு துறைக்கும் நிலம் அதிகம் வேண்டும் என்பதால் இங்கேயும் ரியல் எஸ்டேட் முக்கியமானதாக விளங்குகிறது.
இதேபோல் இந்தியா முழுவதும் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்தி வரும் காரணத்தால், இத்திட்டத்தைச் சுற்றியிருக்கும் நிலத்தின் மதிப்பும், வர்த்தகமும் அதிகரிக்கும் காரணத்தால் 2027ல் ரியல் எஸ்டேட் அதிகம் முதலீட்டை ஈர்க்கும் ஒரு துறையாக இருக்கப்போகிறது.

