Last Updated:
அணி தேர்வு, விளையாட்டு முறை உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இந்திய அணி சொந்த மண்ணில் தடுமாறி வருகிறது. குறிப்பாக கௌதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர், இந்தியாவில் நடைபெற்ற ஆறு டெஸ்ட் போட்டிகளில் நான்கு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.
இதிலிருந்து மீண்டு வெற்றி பாதைக்கு அணி திரும்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர், இந்திய அணி மொத்தம் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இவை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடந்த போட்டிகள் அடங்கும்.
இந்தப் போட்டிகளில் இந்திய அணி 7 போட்டிகளில் வெற்றியும், 9 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இதேபோன்று உள்ளூரில் நடைபெறும் போட்டிகளிலும் இந்திய அணி தடுமாறி வருகிறது.
சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடருக்கு தகுதி பெற முடியாமல் போனது.
அதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் இன்று நடந்து முடிந்துள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது. இதன் காரணமாக அணி தேர்வு, விளையாட்டு முறை உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
November 16, 2025 5:36 PM IST


