ஐபிஎல் தொடரிலிருந்து சொந்த ஊர் திரும்பியுள்ள தோனி, ஜாலியாக பைக் ரைடில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ ஒன்று லைக்ஸ்களை குவித்து வருகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகம் கவனிக்கப்பட்ட வீரர் என்றால் அது தோனியாகத்தான் இருக்க முடியும். இவரது வருகைக்காகவே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் பல ஆட்டங்களின்போது காத்திருந்தனர். சில போட்டிகளில் சென்னை தோற்றாலும், தோனி அடித்த சிக்சர்கள் ரசிகர்களை ஆறுதல் படுத்தியது.
சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை வெறும் 10 ரன்களில் தவற விட்டது. அணியில் பல முக்கிய ஆட்டக்காரர்கள் இல்லாவிட்டாலும், சிஎஸ்கே 5ஆம் இடம் வரை சென்றதற்கு தோனியின் அனுபவமும் திறமையும்தான் முன்னணி காரணங்கள்.
இதையும் படிங்க – தனியுரிமையை மீறி அனைத்தையும் பதிவு செய்வதா..? ரோஹித் சர்மா கண்டனம் – நடந்தது என்ன?
அனுபவமே இல்லாத பவுலர்களை வைத்துக் கொண்டு ஃபீல்டிங்கை துல்லியமாக செட் செய்து, முக்கியமான போட்டிகளில் தோனி சென்னைக்கு வெற்றியை பெற்றுத் தந்தார். ஒரு கட்டத்தில் சிஎஸ்கே வின் கேப்டன் தோனியா அல்லது ருதுராஜா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது.
MS Dhoni Back to Ranchi ❤️ #MSDhoni pic.twitter.com/s166DEtilh
— Chakri Dhoni (@ChakriDhoni17) May 19, 2024
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றால் தோனி தொடர்ந்து விளையாடுவார் என்றும், அல்லது அப்படியொரு சம்பவம் தோனிக்கு சிறந்த ஃபேல்வெல்லாக அமையும் என்றும் கூறப்பட்டது. இருப்பினும், எதற்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.
MS Dhoni enjoying a bike ride in Ranchi. ❤️pic.twitter.com/RjHZqeCTqg
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 20, 2024
இந்நிலையில், ஐபிஎல் தொடரிலிருந்து சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு திரும்பிய தோனி, அங்கு ஜாலியாக பைக் ரைடில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ ஒன்று லைக்ஸ்களை குவித்து வருகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
