ஒரு மனிதன் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகள் என்பது உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை. கால மாற்றத்திற்கு ஏற்ப இவை மூன்றும் பல்வேறு வகையில் பரிணாம மாற்றம் அடைந்துள்ளன. குறிப்பாக, ஆடைகள் அந்தந்த மாநில கலாச்சாரங்களை உள்வாங்கி பாரம்பரியத்திற்கேற்பப் பல விதங்களில் விற்பனையாகி வருகின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை வேட்டி, சேலை பாரம்பரிய உடையாக விளங்கி வருகிறது. நம் முன்னோர்கள் காலத்தில் வேட்டி, சேவை கைத்தறியால் நெசவு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டன. அதனால் அப்போது கைத்தறி நெசவும் செழித்தோங்கி இருந்தது. வீதிக்கு வீதி கைத்தறி ஓட்டும் சத்தை செவியைத் தட்டிக் கொண்டிருந்தது.
ஆனால் இந்த நவீன காலத்தில் வீதிக்கு வீதி ஆயத்த ஆடைக் கடைகள் தான் உள்ளன. இயந்திர உதவியுடன் தயாராகும் துணியால் தயாரான ஆடைகள் தான் எங்கும் வியாபித்திருக்கின்றன. இதனால் கைத்தறி நெசவுத் தொழில் நசிவடைந்து கைத்தறி காட்சிப் பொருளாகி விட்டது. ஒரு சில பகுதிகளில் தான் பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் தொடர்ந்து கைத்தறியைக் கைவிடாமல் காத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: உடல்நலப் பிரியர் முதல் உணவுப் பிரியர் வரை… மாலைப்பொழுதை மகிழ்ச்சியாகக் கழிக்கும் ஸ்பாட்…
சிறுகுறு நிறுவனங்களுக்குப் புகழ்பெற்றிருக்கும் கோவை மாநகரம் முன்னர் நெசவுத் தொழிலுக்கும் புகழ்பெற்றிருந்தது. கோவை கோரா காட்டன் புடவை எந்த அளவிற்குப் புகழ்பெற்றதோ அந்த அளவிற்குக் கோவை கைத்தறி காட்டன் புடவைகளும் புகழ்பெற்றவையே.
கோவையின் வாகராயன்பாளையத்தில் தற்போதும் கைத்தறியில் புடவை நெய்யப்படுகிறது. இந்த காலத்திலும் அந்த கைத்தறி மூலம் புடவையை நெசவு செய்து விற்பனை செய்யும் நெசவாளர் ஜெயபாலன் கூறுகையில், “நான் ITI இல் எலக்ட்ரானிக்கல் இன்ஜினியரிங் படித்து இருக்கிறேன். அப்பொழுது படித்த படிப்பிற்குச் சரியான வேலை கிடைக்கவில்லை. அதனால் காலங்காலமாக நாங்கள் செய்து வந்த கைத்தறி தொழிலை என் அப்பாவிற்கு அடுத்தபடியாகச் செய்யத் துவங்கினேன்.
40 – 45 வருடமாக இந்த வேலை தான் செய்து வருகிறேன். முதலில் கஷ்டம் இல்லாமல் தொழில் நன்றாக இருந்தது. ஆனால் இப்போது முன்பு போல் கிடையாது. எதிர்காலச் சந்ததியினரும் இந்த தொழில் செய்ய விரும்புவதில்லை. இந்தத் தொழிலுக்குத் தகுந்த ஊதியமும் கிடைப்பதில்லை. இதனால் என்னுடைய மகன் பிஇ முடித்துவிட்டு வெளியில் வேலை செய்து கொண்டிருக்கிறான். இந்தத் தொழிலும் திறமையான தொழில் தான் ஆனால் இந்தத் தொழிலைச் செய்ய வருங்காலத்தில் ஆட்கள் கிடையாது.
இதையும் படிங்க: தமிழக விவசாயத்தின் தாய்மடி… பிரம்மாண்டமான மேட்டூர் அணையின் 91வது பர்த்டே…
10 வருடங்களாகத் தொழிலும் ஒரே நிலையில் தான் உள்ளது. உதாரணமாக முன்பு ஒரு புடவைக்கு வேஜஸ் ஆயிரம் ரூபாய் கிடைத்த நிலையில் இப்பொழுதும் அதே ஆயிரம் தான் கிடைக்கிறது. தொழிலில் எந்தவிதமான உயர்வும் இல்லை. இந்த நிலையில் நானும் என்னுடைய மனைவியும் இணைந்து வேலை செய்தால் ஒரு வாரத்திற்கு மூன்று சேலை விகிதம் ரூ.3 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும்.
அப்படிப் பார்க்கையில் ஒரு ஆளுடைய வருமானம் வருமானம் 1500 ரூபாய் மட்டும் தான், வருடத்திற்கு முழுவதும் 12 ஆயிரம் தான். இதன் காரணமாக இளைஞர்கள் அனைவரும் வேறு தொழில்களை நோக்கிச் செல்கிறார்கள். இந்த கைத்தறி தொழிலை நான் சொந்தமாகச் செய்ய வேண்டுமென்றால் முதலீடாக ரூ.3 லட்சம் வரை செலவிட வேண்டும். இவ்வாறு என்னால் பணம் செலவிட முடியாததால் கூலிக்காக வேலை செய்து வருகிறோம்.
நான் வெளியிலிருந்து “காதி கிராப்ட்” வேலை செய்கிறேன் இவர்கள் எனக்கு மெட்டீரியல் அனைத்தும் கொடுத்து விடுவார்கள். பட்டிலிருந்து அனைத்தையும் அவர்களைக் கொடுத்து விடுவார்கள். அதை வைத்து நாங்கள் புடவையாக நெசவு செய்து கொடுத்தால் எங்களுக்கு ஊதியமாக ஒரு புடவைக்கு இவ்வளவு ரூபாய் என கொடுப்பார்கள்.
இதையும் படிங்க: “அட்டைப் பூச்சிகளுக்கு மத்தியில் நடந்து சென்று படித்தோம்” தோடர் மக்களின் சவாலான வாழ்க்கை…
அரசாங்கத்தில் வேலை செய்வதால் எனக்கு ஆண்டிற்கு ஒரு முறை போனஸ், ஊக்கத்தொகை என கொடுப்பார்கள். அதனால் கூட்டுறவு மூலம் நான் அரசாங்கத்தில் வேலை செய்கிறேன். அவர்கள் இந்த புடவையை வாங்கி அரசாங்கத்தின் மூலம் அவர்களாகவே புடவையை விற்று விடுவார்கள். அதனால் பத்து தறிகளில் ஒரு தறி அரசாங்கத்திற்கு நெசவு செய்கிறார்கள்.
இந்தத் தொழில் செய்ய எங்களிடம் கொள்முதல் இல்லாத நிலையில் வெளியிலோ அல்லது அரசாங்கத்திற்கும் இவ்வாறு வேலை செய்து வருகிறோம். ஒருத்தருக்கு மூன்று லட்சம் என்பதால் ஒவ்வொரு தறிக்கும் மூன்று லட்சம் செலவிட்டு, எங்களுக்கு லாபம் கிடைக்கும் அளவிற்குப் புடவைகளை விற்பனை செய்ய முடியாத வகையில் மார்க்கெட் மோசமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
