• Login
Wednesday, September 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சொத்து விவர அறிக்கைகளை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காதவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வாய்ப்பு

GenevaTimes by GenevaTimes
September 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சொத்து விவர அறிக்கைகளை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காதவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வாய்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு நிர்வாக அபராதம் விதிப்பதற்கு முன்னர், தாமதத்திற்கான நியாயமான காரணங்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் தெரிவித்துள்ளது.


2026 ஜூன் 30ஆம் திகதிக்குப் பின்னரும், ஆகஸ்ட் 31ஆம் திகதி வரையிலும் தாமதமாக சமர்ப்பிக்கப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளுக்கு, தாமதமான நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 90ஆம் பிரிவின் கீழ் நிர்வாக அபராதம் விதிக்கப்படவுள்ளதாக ஆணையம் தெரிவித்திருந்தது.


எனினும், அபராதம் விதிப்பதற்கு முன்னர் தாமதத்திற்கான நியாயமான காரணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக அபராதம்


இதன்படி, 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 80(1)ஆம் பிரிவின் கீழ் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருந்தும், அதனை உரிய காலத்தில் சமர்ப்பிக்கத் தவறியவர்கள், நிர்வாக அபராதம் விதிக்காமல் இருப்பதற்கான காரணங்களை 2026 செப்டெம்பர் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் எழுத்து மூலம் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. 

சொத்து விவர அறிக்கைகளை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காதவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வாய்ப்பு | Bribery Commission Gives Opportunity Who Submitted

மேலும் தாமதத்திற்கான காரணங்களுடன் தொடர்புடைய ஆதார ஆவணங்கள் இருப்பின் அவற்றையும் இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


காரணங்களை சமர்ப்பிக்கும்போது, கோரிக்கை விடுக்கும் நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் கட்டாயமாக குறிப்பிடப்பட வேண்டும்.


செப்டெம்பர் 30ஆம் திகதிக்குள் தாமதத்திற்கான காரணங்கள் ஆணையத்திடம் கிடைக்காவிட்டால், தாமதத்திற்கான காரணம் எதுவும் இல்லை எனக் கருதி நிர்வாக அபராதம் விதிக்கப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.


தபால் மூலம் காரணங்களை சமர்ப்பிக்கும்போது, உறையின் இடது பக்க மேல் மூலையில் “தாமதத்திற்கான காரணங்கள்” என குறிப்பிட வேண்டும். மின்னஞ்சல் மூலம் அனுப்பும்போது, மின்னஞ்சலின் தலைப்புப் பகுதியில் அதே விடயத்தை குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய முகவரிகள் மற்றும் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • நிறுவன முகவரி: இயக்குனர் (சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை பிரிவு), எண் 36, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07.
  • மின்னஞ்சல் முகவரி: ald@ciaboc.gov.lk
  • தொலைபேசி/தொலைநகல் எண்: 0112587287
  • வாட்ஸ்அப் எண்: 0767011954
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சரவாக் அரசு RM100,000 வழங்கும் | Makkal Osai

Next Post

சந்திரன் உண்மையில் யாருக்கு சொந்தம்.. பல டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை குறிவைக்கும் உலக நாடுகள்! | Latest Moon Research Trillion-Dollar Resources: Countries Race to Control massive Lunar Economy

Next Post
சந்திரன் உண்மையில் யாருக்கு சொந்தம்.. பல டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை குறிவைக்கும் உலக நாடுகள்! | Latest Moon Research Trillion-Dollar Resources: Countries Race to Control massive Lunar Economy

சந்திரன் உண்மையில் யாருக்கு சொந்தம்.. பல டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை குறிவைக்கும் உலக நாடுகள்! | Latest Moon Research Trillion-Dollar Resources: Countries Race to Control massive Lunar Economy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin