சையத் அல்வி சாலையில் சந்தேகத்துக்கு இடமாக நிறுத்தப்பட்டிருந்த காரை காவல்துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது, காவல்துறையினரிடமிருந்து வேகமாக தப்பித்து சென்ற கார், லாரி மீது மோதியது, பின்னர் அதில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
3 லாரிகள் உட்பட 7 வாகனங்கள் விபத்து: 38 வயது லாரி ஓட்டுநர் மருத்துவமனையில்…
இந்த சம்பவத்தில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக இரண்டு பெண்களும் ஒரு ஆணும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது.
நேற்று ஜூன் 29 அன்று காலை 5:45 மணியளவில் சையத் அல்வி சாலையில் ரோந்து சென்று கொண்டிருந்தபோது, சாலையில் அந்த கார் நிறுத்தப்பட்டிருப்பதை போலீசார் கண்டனர் என்று மதர்ஷிப் கூறியுள்ளது.
என்ன நடந்தது?
சையத் அல்வி சாலையில் காரை சோதனை செய்ய அதிகாரிகள் சென்றபோது, ஓட்டுநர் திடீரென காரை விட்டு தப்பிச் ஓடினார். பின்னர் காவல்துறையினர் துரத்திச் சென்று அவரை கைது செய்தனர்.
காவல்துறை அவரை கைது செய்து கொண்டிருந்தபோது, காரில் இருந்த பெண் பயணி காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
பின்னர் அந்த கார், லாரியுடன் மோதியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
காரில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் சாதனங்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
காரில் இருந்த 25 வயது பெண் ஒருவரும், அவருடன் இருந்த 23 வயது பெண் பயணியும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.

லாரி ஓட்டுநர் கூறியது என்ன..?
விபத்து நடந்த நேரத்தில், நீல நிற கார் ஒன்று பின்னால் வந்து கொண்டிருந்ததாகவும், ஹாரனை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்ததாகவும் லாரி ஓட்டுநர் கூறியுள்ளார்.
ஆனால் அது ஒரு வழிப் பாதை என்பதால், லாரி ஓட்டுனரால் வழி கொடுக்க முடியவில்லை என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்.
பின்னர் சாலை சந்திப்பில் லாரி வந்தபோது, சைரன் சப்தத்துடன் காவல்துறையின் கார் அவருக்கு முன்னால் நின்று, அந்தப் பாதையை தடுத்து நிறுத்துவதைக் கண்டார்.
இதனால் வேகமாக வந்த கார் லாரியுடன் மோதியது. பின்னர் போலீசார் காரை சுற்றி வளைத்ததாகவும், இரண்டு பெண்களும் காரில் இருந்து இறங்கியபோது, அவர்கள் கைவிலங்கிடப்பட்டதாகவும் ஓட்டுநர் தெரிவித்தார்.
The post சையத் அல்வி சாலையில் 3 பேர் கைது.. தப்பித்து லாரியில் மோதிய கார் – விரட்டி பிடித்த போலீஸ் appeared first on Tamil Daily Singapore.