சையத் அல்வி சாலையில் டிரெய்லர் கனரக வாகனம் ஒன்று தானாகவே சறுக்கிச் சாலையின் இடையே சிக்கிக் கொண்டது.
அதை தொடர்ந்து, 24 வயதான கனரக வாகன ஓட்டுநர் ஒருவர் காவல்துறை விசாரணைகளுக்கு உதவி வருகிறார்.
சிங்கப்பூரில் இனி மோசடியில் ஈடுபட்டால் குறைந்தது 6 பிரம்படி – புதிய சட்ட திருத்தம் அமல்
நேற்று முன்தினம் நவ.3 ஆம் தேதி, ஜாலான் சுல்தான் பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்து இரவு 7:10 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து Stomp தளம் கூறுகையில், கனரக வாகனம் போக்குவரத்துக்கு எதிர் திசைக்கு திரும்பியதாகவும், அது ஓர் கட்டுமான தளத்திற்குள் நுழைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதனால் சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அந்த சாலை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாகனம் தானாகவே சறுக்கி இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக காவல்துறை கூறியது.
யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை.
கனரக வாகன ஓட்டுநர் விசாரணைகளுக்கு உதவி வருகிறார்.
TOTO: ஒரு கோடி சிங்கப்பூர் டாலர் பரிசு: வாடிக்கையாளர்களே ரெடியா?
Photos: Stomp

