• Login
Tuesday, October 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சைனாக்காரனுக்கு மூளையோ மூளை.. சத்தமில்லாமல் டிராகன் பார்த்த வேலை! டன் டன்னாய் கஜானாவில் தங்கம்! ஏன்? | Why China Is Buying Gold Reserves to Reduce Dependence on the US Dollar

GenevaTimes by GenevaTimes
October 20, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
சைனாக்காரனுக்கு மூளையோ மூளை.. சத்தமில்லாமல் டிராகன் பார்த்த வேலை! டன் டன்னாய் கஜானாவில் தங்கம்! ஏன்? | Why China Is Buying Gold Reserves to Reduce Dependence on the US Dollar
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Rajkumar R

Time
Updated: Tuesday, October 20, 2026, 8:00 [IST]

பெய்ஜிங்: உலக நாடுகளின் பொருளாதாரத்தை தீர்மானிப்பது தற்போதைக்கு அமெரிக்க டாலர்தான். சர்வதேச வர்த்தகம், எண்ணெய் இறக்குமதி, அந்நிய செலாவணி என பல துறைகளில் டாலரின் ஆதிக்கம் தான் நீடித்து வருகிறது. அதே நேரத்தில் டாலரின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மாற்று வழிகளை ஆராய்ந்து வருகின்றன. அந்த முயற்சியில் அதீத கவனம் செலுத்தி வரும் சீனா தற்போது தங்கத்தின் மீது தனது கவனத்தை செலுத்தி வருகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலையில்லாமல் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில் சீனா தொடர்ந்து தங்கத்தை வாங்கிய குவித்து வருவது உலக நாடுகளையும், பொருளாதார வல்லுநர்களையும் உற்று நோக்க வைத்திருக்கிறது.

China Gold US Dollar

தங்கக் கொள்முதல், வெறும் முதலீட்டு நடவடிக்கையாக மட்டுமல்லாமல் சீனாவின் பொருளாதார பாதுகாப்பு, டாலரை ஓரம் கட்டுவது, சர்வதேச அரசியல் நெருக்கடிகளை சமாளிப்பது என பல கணக்குகளை வைத்து தங்கத்தை வாங்கி குவிக்கிறது சீனா என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

பிரான்சில் இரவு நேர ஊரடங்கு அமல்.. இளைஞர்கள் போராட்டத்தில் வன்முறை.. அதிகரிக்கும் டென்ஷன்

பிரான்சில் இரவு நேர ஊரடங்கு அமல்.. இளைஞர்கள் போராட்டத்தில் வன்முறை.. அதிகரிக்கும் டென்ஷன்

எதற்காக சீனா தங்கத்தை வாங்கி குவிக்கிறது? சீனாவின் தங்க கொள்முதலால் உலக அளவில் தங்கத்தின் விலை உயருமா? உலகப் பொருளாதாரத்தில் சீனாவில் நடவடிக்கை என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும்? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்..

பீப்புள்ஸ் பேங்க் ஆப் சைனா எனப்படும் சீனாவின் ரிசர்வ் வங்கி அந்நாட்டின் தங்க கையிருப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுவாக உலக நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிப்பது புதிது அல்ல.. இருந்தபோதும், சீனா போன்ற மிகப்பெரிய பொருளாதார நாடு எதற்காக தங்கத்தை வாங்கி குவிக்கிறது என்பதுதான் சர்வதேச சந்தையில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

Elon Musk: அமெரிக்க குழந்தைகள் அனைவருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன பங்குகள்! தாராளம் காட்டிய எலான் மஸ்க்! இவ்வளவா?

Elon Musk: அமெரிக்க குழந்தைகள் அனைவருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன பங்குகள்! தாராளம் காட்டிய எலான் மஸ்க்! இவ்வளவா?

சீனாவில் இருந்து வெளிவரும் அதிகாரப்பூர்வ கணக்கின்படி அந்த நாட்டின் தங்க கையிருப்பு சுமார் 2410 டன் இருக்கும் என சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தங்க கட்டிகள் மற்றும் நாணயங்கள் மீதான மக்களின் ஆர்வமும் அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கி மட்டும் தங்கத்தை வாங்கி குவிக்கவில்லை. சீனாவின் ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு நிறுவனமும் தங்களுடைய சேமிப்பை பாதுகாப்பதற்காக தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன.

அமெரிக்கா முதல் இந்தியா வரை.. ஒரே நேரத்தில் உலகெங்கும் வெடிக்கும் போராட்டம்! எல்லாம் ஒரே காரணம் தான்

அமெரிக்கா முதல் இந்தியா வரை.. ஒரே நேரத்தில் உலகெங்கும் வெடிக்கும் போராட்டம்! எல்லாம் ஒரே காரணம் தான்

பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் நிச்சயமற்ற சூழல் நிலவும் போது தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பது இயல்பான ஒன்றுதான். அதனால்தான் சீனர்கள் தங்கள் பார்வையை தங்கத்தின் பக்கம் திருப்பி இருக்கின்றனர் என்கின்றனர்.

முதலீட்டை பாதுகாப்பது மட்டுமில்லாமல் சீனாவின் தங்க கொள்முதலுக்கு பின்னால் அமெரிக்க டாலர் மீதான சார்பை குறைக்கும் பெரிய திட்டமும் இருக்கிறது. உலக நாடுகள் தங்கள் அந்நிய செலாவணி கையிருப்பில் அமெரிக்க டாலரையும், அமெரிக்காவின் அரசு பத்திரங்களையும் தான் வைத்திருக்கின்றன. இதனால் சர்வதேச வர்த்தகத்தில் டாலர் முக்கிய பங்கு வைக்கிறது. ஆனால் பல ஆண்டுகளாகவே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக போட்டி நிலவுகிறது.

அதுமட்டுமல்லாமல் தொழில்நுட்ப கட்டுப்பாடுகள், தைவான் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இரு நாடுகளுக்கு இடையே நிலவி வருகிறது. இதனால் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையே ஒருவேளை போர் போன்ற மோதல் ஏற்பட்டால் இரு நாடுகளும் பரஸ்பரம் பொருளாதார தடைகளை விதித்துக் கொள்ளும். ஏற்கனவே ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் காரணமாக அந்நாட்டுக்கு பெரிய அபாயம் சூழ்ந்துள்ளது.

இது போன்ற சூழலில் அமெரிக்க டாலர் போன்ற மற்றொரு நாட்டின் நாணயத்தை சார்ந்திருந்தால், தங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் தான் சீனா தங்கத்தை நம்புகிறது என்கின்றனர். டாலரின் பங்கை குறைத்து தங்கம் உள்ளிட்ட மாற்று சொத்துக்களின் இருப்பை அதிகரிப்பது தான் சீனாவின் வியூகமாக பார்க்கப்படுகிறது.

ஒரு நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருந்தாலும், உலகளாவிய நெருக்கடிகள் அதன் வளர்ச்சியைப் பாதிக்கலாம். போர், பொருளாதாரத் தடைகள், பணவீக்கம், நிதிச் சந்தைகளில் ஏற்படும் சரிவு போன்ற சூழல்களில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துகளைத் தேடுவார்கள். அந்த வகையில் தங்கத்துக்கு நீண்டகாலமாக முக்கியத்துவம் இருந்து வருகிறது. தங்கத்தின் விலையும் சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும் என்றாலும், பல்வேறு நாடுகளின் நாணயங்களைப் போல ஒரு குறிப்பிட்ட அரசின் நிதி நிலையை மட்டும் சார்ந்திருப்பதில்லை.

இதனால், நாட்டின் மொத்தச் சொத்துகளில் தங்கத்துக்கும் ஒரு குறிப்பிட்ட பங்கை ஒதுக்குவது பொருளாதார அபாயங்களைக் குறைக்க உதவும் என்று கருதப்படுகிறது. சீனாவைப் பொறுத்தவரை, உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்தாலும், உள்நாட்டில் ரியல் எஸ்டேட் துறையின் மந்தநிலை போன்ற பிரச்சினைகள் உள்ளன. இத்தகைய சூழலில் தங்கத்தைச் சேமிப்பது பொருளாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கை எனக் கருதுகிறது சீனா.

இப்போது எழும் முக்கியமான கேள்வி இதுதான். அமெரிக்க டாலரின் இடத்தைத் தங்கம் பிடித்துவிடுமா? என்பது தான். ஆனால், உடனடியாக அப்படி ஒரு மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. சர்வதேச வர்த்தகத்தில் டாலர் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கிறது. உலக நாடுகளின் ரிசர்வ் வங்கிகளும், சர்வதேச நிதி நிறுவனங்களும் டாலரைப் தான் பயன்படுத்துகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.

English summary

China is increasing gold reserves to strengthen financial security, diversify foreign exchange assets and reduce reliance on the US dollar.

Read More

Previous Post

நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் மின்வெட்டு: முழு விவரங்கள் இதோ – Sri Lanka Tamil News

Next Post

இந்தியாவுக்கு நெருக்கடி.. மீண்டும் வேலையை காட்டிய சீனா.. என்ன செய்ய போகிறது மத்திய அரசு? | China’s Tunnel Boring Machine Export Curbs Threaten India’s Metro, Rail and Tunnel Projects

Next Post
இந்தியாவுக்கு நெருக்கடி.. மீண்டும் வேலையை காட்டிய சீனா.. என்ன செய்ய போகிறது மத்திய அரசு? | China’s Tunnel Boring Machine Export Curbs Threaten India’s Metro, Rail and Tunnel Projects

இந்தியாவுக்கு நெருக்கடி.. மீண்டும் வேலையை காட்டிய சீனா.. என்ன செய்ய போகிறது மத்திய அரசு? | China’s Tunnel Boring Machine Export Curbs Threaten India’s Metro, Rail and Tunnel Projects

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin