• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சேமிப்பு கணக்குகளை வைத்து இவ்வளவு விஷயங்களை செய்ய முடியுமா? விவரம் இதோ

GenevaTimes by GenevaTimes
July 18, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
சேமிப்பு கணக்குகளை வைத்து இவ்வளவு விஷயங்களை செய்ய முடியுமா? விவரம் இதோ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இன்றைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட அனைவருமே தங்களுடைய பணத்தை வைத்துக் கொள்வதற்கு ஒரு சேமிப்பு கணக்கை கொண்டுள்ளனர். ஆனால் இந்த கணக்கு தங்களுடைய பணத்தை பாதுகாப்பதற்கு மட்டுமே என்று பலர் நினைத்துக் கொள்கின்றனர். இது தவிர சேமிப்பு கணக்குகளை வைத்து நீங்கள் இன்னும் எக்கச்சக்கமான விஷயங்களை செய்யலாம். அந்த வகையில் சேமிப்பு கணக்குகளை வைத்து நீங்கள் செய்யக்கூடிய முக்கியமான 10 விஷயங்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலமாக பார்க்கலாம்.

சேமிப்பு கணக்குகள் உங்களுடைய பணத்தை பாதுகாக்கவும், தேவையான நேரத்தில் அதனை பயன்படுத்தவும் அனுமதிக்கிறது. வீடுகளில் பணத்தை வைப்பதால் அது திருட்டு போவதற்கோ அல்லது தொலைந்து போவதற்கோ வாய்ப்பு இருப்பதால், அவற்றை சேமிப்பு கணக்குகளில் வைக்கும் பொழுது, வங்கிகள் உங்களுடைய பணத்தின் மொத்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது.

விளம்பரம்

உங்களுடைய சேமிப்பு கணக்கை பயன்படுத்தி பணத்தை பிறருக்கு அனுப்பவோ அல்லது பிறரிடம் இருந்து பணத்தை பெறவும் முடியும். அதாவது பிறருக்கு பணம் கொடுப்பதற்கு நீங்கள் பணத்தை வித்ட்ரா மட்டுமே செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. மாறாக நீங்கள் ஆன்லைன் மூலமாக பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்யலாம்.

உங்களுடைய சேமிப்பு கணக்குகளில் இருந்து நேரடியாக நெட் பேங்கிங், டெபிட் கார்டு, UPI அல்லது செக் பயன்படுத்தி பல்வேறு விதமான பில்களுக்கான பேமெண்ட்களை நீங்கள் செலுத்தலாம். வீட்டு வாடகை முதல் இன்டர்நெட் மற்றும் மொபைல் பில்கள் வரை பல்வேறு விதமான பேமெண்ட்களை இதிலிருந்து உங்களால் செய்ய முடியும்.

விளம்பரம்

உங்களுடைய சேமிப்பு கணக்கின் ஸ்டேட்மெண்ட் என்பது நீங்கள் செய்த ஒட்டுமொத்த பண பரிமாற்றங்களின் விரிவான ஒரு பதிவு ஏட்டை அளிக்கிறது. இதன் மூலமாக நீங்கள் உங்களுடைய செலவுகளை கண்காணித்து அதற்கேற்றவாறு எதிர்காலத்தை திட்டமிடலாம்.

பெரும்பாலான சேமிப்பு கணக்குகளை பராமரிப்பதற்கு நீங்கள் குறைந்தபட்ச பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் வங்கிகள் உங்களுக்கு கட்டணங்களை விதிக்கும். இந்த குறைந்தபட்ச பேலன்ஸ் என்பது வங்கியை பொறுத்து மாறுபடும் மற்றும் வழக்கமாக இது மாத அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

விளம்பரம்

மினிமம் பேலன்ஸ் கணக்கீடு என்பது தினமும் செய்யப்படுவது அல்ல. மாதம் முழுவதும் இருக்கக்கூடிய சராசரி பேலன்ஸ் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, பெரும்பாலான நாட்களில் நீங்கள் 10,000 ரூபாய் பேலன்ஸ் வைத்திருக்கிறீர்கள் என்றால் மற்றும் ஒரு நாளைக்கு 3 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யும் பட்சத்தில் உங்களுடைய மாத சராசரி பேலன்ஸ் என்பது 10,000 ரூபாயாக கணக்கிடப்படும்.

சேமிப்பு கணக்குகளில் உள்ள பேலன்ஸ் தொகைக்கு பொதுவாக 3 முதல் 4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இது குறைந்தபட்ச வட்டி என்றாலும் கூட வீட்டில் பணத்தை வைப்பதால் நமக்கு எந்த ஒரு பணமும் கிடைக்கப் போவதில்லை என்பதுடன் ஒப்பிடும்பொழுது இது ஓரளவுக்கு கணிசமான தொகையாக இருக்கிறது.

விளம்பரம்

ஒருவேளை நீங்கள் உங்களுடைய பணத்தை சேமிப்பு கணக்கில் நீண்ட நாட்களுக்கு வைப்பதற்கு முடிவு செய்கிறீர்கள் என்றால், அதன் மூலமாக அதிக வட்டியை பெறுவதற்கு நீங்கள் அதனை ஃபிக்சட் டெபாசிட் அக்கவுண்டில் வைப்பதை கருத்தில் கொள்ளலாம். எனினும் ஃபிக்சட் டெபாசிட் அக்கவுண்டில் இருந்து மெச்சூரிட்டிக்கு முன்பு பணத்தை வித்ட்ரா செய்தால் அதற்கு நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும்.

Also Read | 
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!

சேமிப்பு கணக்குகள் மூலமாக நீங்கள் பெறும் வட்டி வரிக்கு உட்பட்டது. ஆகவே இந்த வட்டி பணம் முழுவதுமாக வரி ஏற்றது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

விளம்பரம்

வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80TTA இன் கீழ் சேமிப்பு கணக்குகள் மூலமாக நீங்கள் 10,000 ரூபாய் வரை பெறக்கூடிய வட்டிக்கு வரி செலுத்த தேவையில்லை. இந்தத் தொகையை விட அதிகமான வட்டியை பெரும் பட்சத்தில் கட்டாயமாக நீங்கள் வரி செலுத்த வேண்டும்.

.

Read More

Previous Post

அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தியதால் ஐசிசி-க்கு ரூ.167 கோடி இழப்பு? | ICC lost Rs 167 crore due to hosting T20 World Cup series in America?

Next Post

காசாவில் இஸ்ரேல் தீவிரத் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 54 பேர் பலி | Israeli war machine continues deadly attacks

Next Post
காசாவில் இஸ்ரேல் தீவிரத் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 54 பேர் பலி | Israeli war machine continues deadly attacks

காசாவில் இஸ்ரேல் தீவிரத் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 54 பேர் பலி | Israeli war machine continues deadly attacks

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin