
ஜோதிடத்தின்படி, ஜூன் 16 ஆம் தேதி செவ்வாய் கிரகம் ரிஷப ராசிக்கும் கிருத்திகை நட்சத்திரத்திற்கும் நகருகிறார். இந்த மாற்றம் மேஷம், சிம்மம், விருச்சிகம், தனுசு ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம், தொழில் முன்னேற்றம் மற்றும் எல்லா வேலைகளிலும் வெற்றியைத் தரும்.
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றுக்கு காரணியான இந்த செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியையும், அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். தற்போது செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷத்தில் பயணித்து வரும் நிலையில், ஜூன் 16 ஆம் தேதி அவர் ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். அதோடு கிருத்திகை நட்சத்திரத்திற்குள்ளும் பயணிக்கவுள்ளார்.
ஜோதிடத்தில் செவ்வாய் மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தின் இந்த சேர்க்கை மிகவும் செல்வாக்கு மிக்கதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். சூரியனும் செவ்வாயும் நட்பு கிரகங்கள் என்பதால், சூரியனின் நட்சத்திரத்திற்கு செவ்வாய் செல்வது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக நான்கு ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல நிதி ஆதாயங்களையும், தொழிலில் முன்னேற்றத்தையும், ஒவ்வொரு வேலைகளிலும் வெற்றிகளையும் காண்பார்கள்.
மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைகூடும். முன்னர் செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் தலைமைத்துவ திறன்கள் பாராட்டப்படும். சிலருக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். உங்களின் பேச்சு இக்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் பல முக்கியமான வேலைகளைத் திறம்பட செய்து முடிப்பீர்கள். இக்காலத்தில் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைக் காண்பீர்கள்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாகத் தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும். சமூகத்திலும் பணியிடத்திலும் உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வணிகர்களுக்கும் இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்வில் நேர்மறையான பலன்களைப் பெறுவார்கள். தன்னம்பிக்கை இரட்டிப்பாகும். எத்தகைய கடினமான வேலைகளையும் வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்குப் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
தனுசு ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்திலும் தொழிலிலும் எதிரிகளை அசால்ட்டாக வீழ்த்தி வெற்றி காண்பார்கள். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்குச் சாதகமாக வரும். கடின உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும். நாள்பட்ட நோய்கள் நீங்கி உடல் நலம் மேம்படும். மொத்தத்தில் இக்காலம் தனுசு ராசிக்காரர்களுக்குப் பொற்காலமாக அமையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இக்கட்டுரை தொடர்பான தகவலை தமிழ் போல்ட்ஸ்கை உறுதிப்படுத்தவில்லை. எங்களின் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. இதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

