புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் சஞ்சீவ குமார சமரரத்ன அல்லது கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி உட்பட ஐந்து பேர் இதன்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக வந்த கணேமுல்ல சஞ்சீவ, பெப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW