பிரபல சிறு சேமிப்புத் திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS), டைம் டெபாசிட் மற்றும் ரெக்கரிங் டெபாசிட் ஆகியவை அடங்கும். இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அரசால் காலாண்டுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இந்த நிலையில், சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான சமீபத்திய வட்டி விகிதங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.


