நீங்கள் மாதத்திற்கு ரூ.8,333 (ஆண்டுக்கு ரூ.1,00,000) வீதம் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் உங்களது மொத்த முதலீடு ரூ.15,00,000ஆக இருக்கும். 21-வது ஆண்டின் முடிவில் வட்டியுடன் சேர்த்துச் சுமார் ரூ.47.40 லட்சம் முதிர்வுத் தொகையாகக் கிடைக்கும். நீங்கள் இத்திட்டத்தின் அதிகபட்ச வரம்பான மாதத்திற்குச் சுமார் ரூ.12,500 (ஆண்டுக்கு ரூ.1,50,000) வீதம் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் உங்களது மொத்த முதலீடு ரூ.22,50,000ஆக இருக்கும். 21-வது ஆண்டு முடிவில் வட்டியுடன் சேர்த்து ரூ.71.11 லட்சம் என்ற பெரும் தொகை முதிர்வுத் தொகையாக கிடைக்கும்.


